Sunday, October 18, 2015


இந்திரஜித் துடுக்காகப் பேசியதைக் கேட்ட, இராவணனின் இளவலான விபீஷணன்….சப்த சிரஞ்சீவிகளுள் ஒருவன்அசுரகுலத்தில் தப்பிப்பிறந்த உத்தமன்…. “ நூற்பெருங்கடல் நுணங்கிய கேள்வியான்…”…. “ தீவினையை எல்லாம் வென்றவருள் நன்றுண வீடணன்…” எழுந்து நின்று பேசத் துவங்கினான்

 

விபீஷணன் இந்திரஜித்தை நோக்கி, “ உலக நூல்களில் கூறப்பட்டுள்ளவற்றை, நுண்மான் நுழைபுலங்கொண்டு ஆராய்ந்தவர்களைப் போன்று; இப்போதைக்கு ஏற்றவாறு கருத்துக்களைச் சொல்ல முன்வருகின்ற கோட்பாடுடையவனேகால நியதியையும், மேல் நிகழவிருக்கும் நிகழ்ச்சிகளையும் உணர்வதற்கான கல்வியறிவு வாய்க்கப்பெறாத சிறுவனான நீஇத்தகைய சொற்களைச் சொல்லக் கடவையோ….?

 

வாலிபனாக இருப்பதால், எது சொல்ல வேண்டும்எது செய்ய வேண்டும்என்கிற வழிமுறையை நீ அறியவில்லைவிழிகளில்லாத ஒருவன் தன் கைகொண்டு வரைந்த சித்திரமனைய செப்புகிறாய்வயதிலும், ஞானத்திலும், ஒழுக்கத்திலும் முதிர்ந்து விளங்கும் பெரியோர், பிரம்மஞானிகள், மிகச்சிறந்த வீரர்கள் என்று குழுமியுள்ள மந்திராலோசனைப் பேரவையில் நீயும் ஒருவனாக அமர்வதற்குத் தகுதியுள்ளவனோ….?

 

தூயவரும், நீதிமுறைக்கேற்ற செயல்களையே செய்பவரும், பழமை வாய்ந்தவரும், சான்றோர்களுமான தேவர்கள் ஒருபுறமிருக்கஅவர்களினும் வேறான அவுணர் முதலான கொடியவர், தவத்தினால் தேவரைப்போல் சிறப்புற்றது மாயமோ.. வஞ்சமோ.. வன்மையோ…?

 

அறம் துறந்து, அமரரை வென்ற உன் வீரத்தின் திறமையை நன்கு ஆராய்ந்தால், அதுவும் நீ புரிந்த தவத்திற்கு தேவர்கள் உனக்களித்த வரத்தின் பலமே…”

 

மும்மூர்த்திகளையும் அடக்கி, மூன்றுலகும் வென்று, தேவரை வெற்றிகொண்டு, தம்வாழ்நாள் முழுவதும் சிறந்து விளங்குபவர் எவரேனும் இங்கு உண்டா…? முனிவரும், அமரரும் வினைகளை வென்று, முக்தியுலகை அடைந்தவர்கள்…. அவர்களைப் பேதையான…. சிறுபிள்ளையான நீஎதிர்க்கமுடியுமா எனா…? “ என்றுரைத்தான் விபீஷணன்

 

பின்பு, இராவணனை நோக்கி, “ என் சொற்களை நீ இகழாமல் இருப்பாயாயின், தெளிந்து அறிந்த கருத்தை நான் இயம்புவேன்…”

எந்தை நீ…. என் தாயும் நீ…. என் தமையனும் நீதவத்தினால் நான் கண்டு வழிபடற்குரிய கடவுளும் நீமற்றும் முற்றும் நீஇந்திரப்பதவி போன்ற பெரிய சாம்ராஜ்யத்தை இழப்பதற்குரிய செயலைப் புரிகின்றனை,             என்று நினைந்து மனம் வருந்தினேன்ஆகலின் உன்பாற் சில அறிவுரைகளைக் கூறுவதை மேற்கொண்டேன்….”

 

மொய்ம்பினோய்கற்றதனால் நிகழக்கூடிய மாண்பு என்னிடம் இல்லாவிடினும், இப்பொழுது நிகழ்ந்துள்ள பெரிய நிகழ்ச்சியை ஆராயவல்ல அறிவு எனக்கு இன்றாயினும், இந்த மந்திராலோசனையின் துணிந்த பொருளைத் தெரிவதில் தளர்ச்சி ஏற்படினும், என் சொற்களை முழுதும் கேட்ட பின்னர்; வேண்டுமெனின் சினம் கொள்வாயாக….”

 

கோநகர் முழுவதும் நினது கொற்றமும்

சானகி யெனும் பெயருலகின் நம்மனை

யானவள் கற்பினால் வெந்த நல்லதோர்

வாநரம் சுட்ட்தென் றுணர்தல் மாட்சியோ….”

யுத்த காண்டம்…. இராவணன் மந்திரப் படலம்….

ஜானகி என்று பெயர் கொண்ட உலகின் தாயாகிய சீதாப்பிராட்டியின் கற்பு மாண்பினால்; நினது கொற்றமும், இலங்காபுரி முழுவதும் வெந்தழிந்தனவே அல்லாமல், ஓர் வாநரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ…?!

 

விபீஷணனின் வாயிலாக வரும் கம்பனின் கவித்திறன்தான் என்னே…?! ஆரணிய காண்டத்திலும், சுந்தர காண்டத்திலும் ஜானகியின் கற்பைக்கனலெனசுட்டியிருக்கிறான் கம்பன்

அரக்கரெனும் கான்சுட முளைத்த கற்பின் கனலியை…” ….. ஆரணிய காண்டம்

சானகி என்றொரு தழல்…” ….. சுந்தர காண்டம்….

 

ஏகமூர்த்தி மூன்றுமூர்த்தி நாலுமூர்த்தி நன்மைசேர்

போகமூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தியென்னில் மூர்த்தியாய்

நாகமூர்த்தி சயனமாய் நலங்கடற் கிடந்துமேல்

ஆகமூர்த்தி யாயவண்ணம் என்கொல் ஆதிதேவனே…! “

திருமழிசையாழ்வார்…. திருச்சந்தவிருத்தம்…..