Thursday, January 8, 2015

மலர் என்று உச்சரிக்கும்போதே, மனமும், செயலும் மென்மையாகி விடுகிறது..மெல்லினம் என்கிற வார்த்தைக்கு
முழுப்பொருளுமே மலர் என்றே எடுத்துக்கொள்ளலாம்..

பெண்ணினம் என்கிற மானுடத்தின் ஆதிசக்திக்காகவே படைக்கப்பட்டதுதான் மலரினம்..சங்க இலக்கியமான குறிஞ்சிப்பாட்டில் கபிலர் 99 வகையான மலர்களைக்
குறிப்பிடுகிறார்..அதில் 50க்கும் மேற்பட்ட மலர் வகைகள்
இப்போதும் பயன்பாட்டில் இருக்கின்றன..
...
மங்கையர் தங்களின் கூந்தலில் சூடிக்கொள்வதற்காகவே
பிறவியெடுத்தவை மலர்கள்..அதனாலேயே பிறவிப்பயனும்
அடைந்தவை..! திருவிளையாடற்புராணத்தில் ஒரு கதை வருகிறது..இதைத் ”திருவிளையாடல்” என்று திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார் ஏ.பி.நாகராஜன்...சிவாஜிதான் இறையனார், தருமியாக நாகேஷ், நக்கீரராக ஏ.பி.என்னே நடித்த படம்..”கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ..” என்று தொடங்குகின்ற அந்தப்பாட்டின் பொருள் என்ன என்று நக்கீரர் கேட்க, ”பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு” என்று கூறுகிறார் இறையனார்.” மலர்களைச் சூடிக்கொள்வதால்தான் மங்கையரின் கூந்தலுக்கு மணம் வருகிறது ..” என்று அறிவுப்பூர்வமாக வாதாடுவார் நக்கீரர்...
எப்போது அந்தக்காட்சியைப் பார்த்தாலும் வசனத்துக்காக ஏ.பி.என்னைப் பாராட்டத் தோன்றும்...

தமிழிலக்கியத்தில் மலரை வைத்துத்தான் மங்கையரை வர்ணிப்பார்கள்..முகர்ந்து பார்த்தாலே வாடி விடுமாம் அனிச்ச மலர்...குவளை மலர்..நீலநிற அல்லி..கருங்குவளை என்று பெண்ணின் கண்ணுக்கு உவமையாகச் சொல்வர்..கை விரல்களுக்கு காந்தள் மலர்..வெண்காந்தள், செங்காந்தள் என்று இருவகை உண்டு..ரோஜாவுக்குப் பண்டையப் பெயர்..முளரிப்பூ..அல்லிக்கு ஆம்பல் என்று பெயர்..மல்லிகைக்கு மெளவல்...( ரஜினி நடித்த சிவாஜி படப்பாடலில் இந்தப் பெயர் வரும்..!) ஆர்கிட் பூவுக்கு மந்தாரை என்று பெயர்..

கூந்தலில் சூடிக்கொள்வதற்கென்று ஒருவகை மலர்கள்..
எம்பெருமானின் மலர் கைங்கர்யத்துக்கென்று( வைணவத் தமிழ்..! ) பிரத்யேகமான மலர் வகைகள் உண்டு...ஆடல்வல்லானுக்கு கொன்றை மாலை சூடுவது வழக்கம் என்பது திருஞானசம்பந்தரின், ‘ நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்...” என்கிற கோளறு திருப்பதிக வரிகள் மூலம் தெரிய வருகிறது...ஸ்ரீமந்நாராயணன் அலங்காரப்பிரியன்...தாமரை, முல்லை, மல்லிகை, சாமந்தி, ரோஜா, செண்பகம், என அத்தனை மணம் வீசும் மலர்களோடு, திருத்துழாய் இலைகள் சேர்த்துக் கட்டப்பட்ட மாலையை அணிகின்றவன்..அதுவும் கோதை சூடிக்கொடுத்த மாலையை விருப்புற்று அணிந்து கொள்ளும் மலர்மார்பன்...!

பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை பூக்கும் மலர் குறிஞ்சி மலர்...நீலக்குறிஞ்சி பூத்துக் குலுங்குவதால்தான்
நீலகிரிக்கு அந்தப் பெயர் வந்தது...

இராமாயணத்தில் விதவிதமான மலர்களின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறான் கம்பன்..பெண்களை வர்ணிக்க மலர்களை உவமையாகக் கூறுவதில் கம்பனுக்கு நிகர்..கம்பனே..!

வண்டு உறை கமலச் செல்வி வாள் முகம் பொலிய வாசம்
உண்டு உறை குவளை ஒண் கண் ஒருங்குற நோக்கி ஊழின்
தெண் திரைக் கரத்தின் வாரி திரு மலர் தூவி செல்வர்
கண்டு அடிபணிவதென்ன பொலிந்தது கடவுள் யாறுர்...

ஆரணியக் காண்டம்...சூர்ப்பணகைப் படலம்..

தெய்வத்தன்மை பொருந்திய அக் கோதாவரி ஆறு, வண்டுகள் மொய்க்கும் செந்தாமரை மலர் என்னும் அழகிய ஒளி பொருந்திய முகம் மலர்ந்து விளங்க..நறுமணத்தை உட்கொண்டு தங்குகின்ற குவளை மலர்கள் என்னும் ஒளி மிகுந்த கண்களால் ஒருசேரப் பார்த்து, தெளிவான அலைகள் என்னும் கைகளால் சிறந்த மலர்களை வாரியெடுத்து வீசி, அவ்வழியேச் செல்லும் இராமன் முதலான மூவரையும் பார்த்து, அவர்தம் திருவடிகளை வணங்குவது போல விளங்கியது...

ரஜினி நடித்த தங்கமகன் படத்தில் “ இராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ...” என்றொரு பாடலை நா.காமராசன் எழுதியிருப்பார்..தாமரை காலையில் மலர்ந்து, மாலையில் குவியும் தன்மையுடையது..இந்தப் பாடல் வரி வித்தியாசமான கற்பனை என்றாலும், விரசமான உள்ளர்த்தம் கொண்டது..இதுபோல இரட்டை அர்த்தப் பாடல்கள் எழுதியே நல்ல இலக்கியத்தை ஒழித்துக் கட்டிவிட்டார்கள் இந்த so called சினிமா பாடலாசிரியர்கள்..:)
See More
06:41

No comments:

Post a Comment