Tuesday, September 27, 2016


வட இந்தியப் பயணம்…. ( 9 )

 

நடுஇரவு ஒருமணிக்கு, கரோல்பாக் ஹோட்டல் மெட்ரோவின் முதல் மாடியிலிருந்த அறைக்கு வந்து படுத்ததுதான்முழிப்பு வரும்போது ஏழரைமணிஅறையிலேயே கெட்டில், காஃபி பவுடர், பால் பவுடர் எல்லாமிருந்ததுகாஃபி தயார் செய்து குடித்தோம்.. :)  எதேச்சையாக ஃபோனை எடுத்துப் பார்த்தேன்விஜயன் மாமாவிடமிருந்து இரண்டு மிஸ்டு கால்ஸ்விஜயராகவன் மாமா.. என் அம்மாவின் கடைசி தம்பி…. தில்லியில், வேளாண்துறை அமைச்சகத்தில் பணியாற்றுகிறார்மந்திர் மார்க்கில் இருக்கும் அரசுக் குடியிருப்பில் வசிக்கிறார்மாமாக்களைப் பற்றித் தனிப்பதிவே எழுதலாம்எங்களைக் குணவான்களாகவும், நல்ல கலாரசிகர்களாகவும் வளர்த்ததில் பாட்டிக்கும், மாமாக்களுக்கும் பெரும் பங்குண்டு….!

 

மாமாவைப் ஃபோனில் அழைத்துப் பேசினேன்

இன்று என்ன ஃப்ரோக்ராம்…? “ என்று கேட்டார்.

தில்லியைச் சுற்றிப் பார்க்கலாமென்று இருக்கிறோம்….”

நீ தங்கியிருக்கும் ரோடுக்குப் பக்கத்து ரோடுதான் குருத்வாரா ரோடுஅங்குதான் பணிக்கர் ட்ராவல்ஸ் ஆஃபீஸ் இருக்கு.. அங்க போய் தில்லி லோக்கல் ஸைட் ஸீயிங் பஸ்ஸுக்கு டிக்கெட் வாங்கிக்கோஃபோன் நம்பர் அனுப்புகிறேன்…” என்று சொன்னவர், உடனே மெசேஸ் அனுப்பினார்

ஃபோன் செய்தோம்ஒன்பது மணிக்கு பஸ் கிளம்புகிறது என்றார்கள்…. வேக வேகமாய்க் குளித்துவிட்டு, ஒரு ஆட்டோ பிடித்து, பணிக்கர் ட்ராவல்ஸ்க்கு ஓடினோம்

 

நாங்கள் முன்பதிவு செய்திருந்த பேக்கேஜிக்கு, ஹோட்டலிலேயே எங்களுக்குக் காலையுணவு இலவசம்நேரமின்மையால் காலையுணவு சாப்பிடவில்லைபோகிற வழியில் சாப்பிட்டுக் கொள்ளலாமென்று முடிவு செய்தோம்தில்லி லோக்கல் ஸைட் ஸீயிங் குளிர்சாதனப் பேருந்துக் கட்டணம் நபர் ஒன்றுக்கு 480 ரூபாய்…! எங்கள் பஸ்ஸில் இருபது பேர் இருந்திருப்பார்கள்முக்கால்வாசிப்பேர் எங்களைப் போல் தில்லியைச் சுற்றிப் பார்க்க வந்த தமிழர்கள்ஒன்பது மணிக்கு பஸ் கிளம்பியதுஎங்கள் டூர்கைட் ராகேஷ் சரியான காமெடி பீஸ்… :) அவனுடைய ஆங்கில உச்சரிப்பைக் கேட்டு எங்களுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை… :) ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் குறைந்த பட்சம் பத்து தடவையாவது சொல்லிக் கொண்டேயிருந்தான்… :) காதில் புகை வராத குறைதான்… :)

 

நாங்கள் முதலில் சென்ற இடம் பஹாய் மந்திர்தாமரை வடிவத்தில் கட்டப்பட்ட ஓர் ஆலயம்ஆலயம் என்று சொல்வதற்கே அங்கு ஒன்றுமில்லைஉள்ளே பெரிய தியானக்கூடம் இருக்கிறதுஅவ்வளவுதான்அப்பாவோடு 89—இல் தில்லிக்கு வந்தது…. பின்பு 94 முதல் 97 வரை மூன்று வருடங்கள் தில்லியில் வசித்ததில் இரண்டு முறை தில்லியைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன்இப்போது சுற்றுவது நான்காவது முறை… :) பஹாய் மதம் அரூப மதமாம்… :) இதைத்தானே அத்வைதமும் சொல்கிறது… :) அத்வைதியான எனக்கு இந்த லோட்டஸ் டெம்பிள் எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை…. :)

 

ஒன்றுமில்லாத இந்த ஆலயத்தைச் சுற்றி, எப்படி இத்தனை ஏக்கர்கள் தில்லியில் இவர்களால் வளைத்துப்போட முடிந்தது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்… தில்லியின் பாதியிடத்தை சமாதிகளும், இதுபோல் ஒன்றுக்கும் உதவாத கட்டடங்களும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன…:) பஹாய் மந்திர் போகும் வழியில் சாட் கடை இருந்தது… ஆளுக்கொரு ப்ளேட் சென்னா சமோசா சாப்பிட்டோம்… அந்தக் காலை நேரத்தில் மிகவும் சுவையாக இருந்தது… :) தில்லியில் நான் ஏற்கனவே வசித்தவள் என்பதால், தில்லியில் கிடைக்கும் பல்வேறு விதமான உணவு வகைகளைச் சுவைத்து மகிழ்ந்திருக்கிறேன்… :)

 

தில்லி அருமையான நகரம்… பழமையும், புதுமையும் சேர்ந்த கலவை… தில்லி பிடித்து விட்டால், வேறு ஊரில் வசிக்கப் பிடிக்காது… வருணுக்கு தில்லி மிகவும் பிடித்து விட்டது… ” ஏன் சென்னைக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு வந்தாய்…” என்று போகும் வழியில் கேட்டுக் கொண்டே வந்தான்… :) என்ன செய்வது… :) நினைவில் காடுள்ள மிருகம் போல….குருதியில் காவிரிநீர் ஓடும் மனுஷி நான்… :) இந்த மண்ணை விட்டு வேறெங்கும் என்னால் இருக்க முடியாது… :)

 

தொடரும்….