Wednesday, March 11, 2015


அக்ககுமாரன்அஞ்சனை மைந்தனால் வதம் செய்யப்பட்ட சேதியை அறிந்த இலங்கேஸ்வரனின் மூத்த குமாரனான இந்திரஜித்…( மேகநாதன்தேவேந்திரனை வெற்றி கொண்டதால் இந்திரஜித் என்று அழைக்கப்பட்டான்..) தன் விழிகளிலிருந்து நெருப்புப்பொறி சிந்த சினம் கொண்டவனானான்தம்பியை நினைத்துத் தாரை நீர் ததும்பும் கண்ணான் ஆனான் மேகநாதன்

குரங்கினாற் குரங்கா வாற்றல் எம்பியோ தேய்ந்தான்

எந்தை புகழன்றோ தேய்ந்தது….?..” என்று கூறி வருந்துவானாயினான்

 

இராவணனின் அரண்மனை புகுந்த இந்திரஜித்.. தந்தையின் பாதங்களில் விழுந்து, தம்பி இறந்தமைக்காக அழுதான்இராவணனும் அவனைத் தழுவிக் கொண்டு ழுது சோர்ந்தான்

வன் திறல் குரங்கின் ஆற்றலை உணராமல், இப்போது நடந்ததை எண்ணி வருந்துகின்றாய்வரிசை வரிசையாக படைகளை அனுப்பி, அரக்கர் குலத்தை நீயே குறையக் கொன்று விட்டாய் அன்றோமன்னவாகிங்கரர், சம்புமாலி, பஞ்ச சேனாபதிகள்என்று போருக்குச் சென்றவர் ஒருவரும் மீண்டாரில்லைஅப்போதே நீ சிந்தித்திருக்க வேண்டாமா…? அந்தக் குரங்கு சாதாரணக் குரங்கில்லை.. மும்மூர்த்திகளும் ஒரு வடிவாய் வந்திருக்கும் குரங்கு என்று…?!

சங்கரன் அயன் மால் என்போர்

தரமெனும் தரத்ததாமே…”

இந்திரஜித்தின் ஆராய்ச்சித் திறனும், பகைவனை மதிக்கும் வீரமும் புலப்படுகின்றன

 

இத்தனை அழிவுக்குப் பிறகும், அக்ககுமாரனை போர்க்களம் அனுப்பியது அறிவுடைய செயலாகுமோ…?

ஆயினும்..ஐயனேதிரிபுரம் வென்ற இலங்கேஸ்வரனேமகாவீரனான அந்தக் குரங்கை, யான் ஒருவனே..ஏய் எனும் அளவில் பற்றிக் கொண்டு வருவேன்…! இனி இடர் கொண்டு நீ வருந்த வேண்டியதில்லை…” என்று கூறி, அநுமனோடு போர் புரியக் கிளம்பிச் சென்றான்

 

போர்க்களம் சென்ற இந்திரஜித், அங்கு மலை போல் குவிந்து கிடந்த அரக்க சடலங்களைப் பார்த்து மனம் வெதும்பினான்சுக்கு நூறாய்ப்போன தன் தம்பியின் உடலைப் பார்த்து கண்ணீர் சிந்தினான்… “ எந்தாய்.. எங்களையெல்லாம் எளிதில் விட்டு நீங்கி, எவ்வுலகத்தை உற்றாய்…” என்று அரற்றினான்

 

மாவீரனான இந்திரஜித்தைப் பார்த்து, “ யான் இனி வெற்றியடைவதுஅல்லது தோற்பதுஇவற்றுள் ஒன்று இன்றைக்கு அமையும்இவன் தான் இந்திரஜித் போலும்…” என்று அநுமன் மனதுக்குள் நினைத்துக் கொண்டான்….

 

எப்போதும் போல், அநுமன் ஒரு மராமரத்தைக் கையிற் பிடுங்கி எடுத்துக் கொண்டு, பேருருக் கொண்டவனானான்கம்பனின் கவிப்புலமைக்கு ஒரு பாடலை உதாரணம் காட்டுகிறேன்போர்க்களக் காட்சியேயானாலும் அவன் தமிழ் நம்மை மெய் மறக்க வைக்கிறது….!

 

உதையுண்ட யானை உருண்டன யானை ஒன்றோ

மிதியுண்ட யானை விழுந்தன யானை மேன்மேல்

புதையுண்டன யானை புரண்டன யானை போரால்

வதையுண்டன யானை மறித்தன யானை மண்மேல்..”

சுந்தர காண்டம்…. பாசப்படலம்

 

நால்வகைப் படைகளும் அழிந்த பின்பு, களத்தில் இந்திரஜித், மாருதி என்ற இரு மாவீர்ர்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றனர்… அநுமனின் மேல் இந்திரஜித் தன் கொடிய வில்லின் நாணைத் தெறித்தான்..அந்த நாண் அற்றுப்போகவும், தன் நெடுந்தோள் புடைத்து ஆர்த்தான் அநுமன்…

 

அநுமனைப் பார்த்து, “ நீ அடைந்துள்ள உன் வாழ்நாளுக்கு இன்றே முடிவு எல்லையாக அமையும்….” என்று கர்ஜித்தான் இந்திரஜித்…

 

“ அரக்கர் குலமே அழியப் போகிறது..அதைக் கண்ணால் காணவே நான் இங்கு வந்துள்ளேன்…” என்றான் அநுமன்…

 

அநுமன் மேல் வலிமை வாய்ந்த அம்புகளை ஏவினான் இந்திரஜித்..அநுமன் சினம் கொண்டு, அவன் தேரைத் தேர்ப்பாகனோடு; தரையில் விழுந்து அழியும்படிப் புடைத்தான்…இருவரும் மிகக் கடுமையாக்ப் போர் புரிந்தனர்…

 

இறுதியாக, பிரம்மாஸ்திரத்தை அநுமன் மேல் எய்தான்..நான்முகனின் அஸ்திரம், அநுமனின் தோள்களைப் பிறங்கச் சுற்றி அவனைப் பிணித்தது….அநுமன் பிரம்மாஸ்திரத்தின் தாக்கத்தால் படிந்து, சாய்ந்து விழுந்தான்… மாருதி பிரம்மாஸ்திரத்தால் ஒருமுறை கட்டுப்பட, பிரமனால் முன் விதிக்கப்பட்டதாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது…

 

“ மன்னுபுகழ் கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனே..

தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய்…

என்னுடைய இன்னமுதே…இராகவனே தாலேலோ…”

…குலசேகராழ்வார்…பெருமாள் திருமொழி…. :)


 

 

No comments:

Post a Comment