தமிழில் பிரபலமான பாடல் எது...? கதைகளிலும், திரைப்படங்களிலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட பாடல் எது..? கம்பராமாயணத்தில் வரும் “ அண்ணலும்,
நோக்கினாள்..அவளும் நோக்கினாள்..” பாடல்தான்.. நோக்குதலுக்கும், பார்த்தலுக்கும் நுட்பமான வேறுபாடு இருக்கிறது.. “யான் நோக்கும்காலை நிலன் நோக்கும்; நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்..” இரண்டே வரிகளில் மிக அழகான ஒரு காதல்கவிதை ... சொல்லுவான் வள்ளுவன்...! அத்தனை எளிதில் நாம் யாரையும் நோக்கிவிட மாட்டோம்.. நோக்குதலை, ஒரே பாடலோடு விட்டுவிடவில்லை கம்பன்.. அடுத்தடுத்து வருகின்ற பாடல்களிலும் நயமாக விளக்குகின்றான்.. “ பருகிய நோக்கு என்னும் பாசத்தால் பிணித்து..” என்கிற பாடலில் நோக்குதல் என்கிற உணர்வை பாசம் என்ற குணத்தோடு இணைக்கிறான்...ஆக, பாசத்தோடு, நேசிப்பவர்களைத்தான் நாம் நோக்குவோம் என்பது புலனாகிறது..இந்த வரிசையில் இன்னுமொரு அழகான பாடலை இங்கே நான் எடுத்துக் கொள்கிறேன்.. மருங்கிலா நங்கையும் வசையில் ஐயனும் ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினர் கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப் பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ.. பால காண்டம்....மிதிலைப்படலம். இடையில்லை என்று சொல்லும்படி சிறிய இடையை உடைய சீதையும். இழிவில்லாத குணங்களையுடைய இராமனும் இரண்டு உடல்களுக்குப் பொருந்திய ஒரே உயிர் போல் ஆனார்கள்..திருப்பாற்கடலின் பள்ளியறையில் இல்லறம் நடத்தியவர்கள் பிரிந்து போய்விட்டார்கள்..மிதிலையில்தான் மீண்டும் சந்திக்கிறார்கள்.. கம்பராமாயணம் ஒரு காப்பியம்..வாழ்க்கை வரலாறு.. ஒரு மனிதனின் வாழ்வில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களைச் சுவையாக, உணர்ச்சியோடு சொல்லியாக வேண்டும்..எப்பவுமே காதல் உணர்வுகளுக்குத்தான் முதல் மரியாதை..அந்த வகையில் கம்பனைக் காதல்கவி என்று சொல்வதில் எனக்கு மகிழ்ச்சியே...smile emoticon See More |
9 May
![]()
Bagavathi Ganesh updated her status.
10 May 2014 12:27 |
No comments:
Post a Comment