Monday, December 29, 2014

ஒரு ஆண் சக ஆணை நேசிப்பதும், பெண் சக பெண்ணை நேசிப்பதுமான ஒரு விஷயத்தை நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை..பெண் ஆணை நேசிப்பதும், ஆண் பெண்ணை நேசிப்பதும்தான் உலகநியதி..வாழ்வியல்முறை...இதைத்தான் இறைவனே அர்த்தநாரீஸ்வரனாக இருந்து வெளிப்படுத்துகிறான்..ஒரே நேர்க்கோடான வாழ்க்கையில் தடம்புரண்டு, எதிர்மறையான வாழ்க்கைமுறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதால் யாருக்கு என்ன சந்தோஷம் கிடைத்துவிடப் போகிறது..சமூகம் அவர்களைப் புரியாதப்புதிராகத்தான் பார்க்கிறது..
மிதிலைநகரத்துத் தெருக்களில் நடந்துபோகும...் இராமனைப் பார்க்கும் அந்நகரத்துப்பெண்கள் எப்படியெல்லாம் அவனை ரசிக்கிறார்கள்...இதை எழுதும்போது எனக்கு சிரிப்பு வருகிறது..இந்தப்பெண்களுக்கு வேறு வேலையில்லையா...தெருவில் போகிற ஆணை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பார்களா...
பெயர் தெரியாத எவனோ ஒருவன் தெருவைக் கடந்துபோனால் யார் கண்டுகொள்ளப் போகிறார்கள்...அங்கே நடந்து போவது யார்..

.நின்றும், இருந்தும், கிடந்தும், என்றும் நினைப்பது அவனையல்லவா...அவனை நினப்பதற்கென்றே இந்த ஜென்மம் எடுத்திருக்கிறோம்...கரும்பு போல இனிக்க
இனிக்க எழுதியிருக்கிறான் குறும்புக்கார கவி...!
தோள் கண்டார் தோளே கண்டார்; தொடுகழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார்; தடக்கை கண்டாரும் அஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்து அன்னார் உருவு கண்டாரை ஒத்தார்..
பாலகண்டம்...மிதிலைப்படலம்.
ஒவ்வொரு சமயத்தினருக்கும் ஒரு உருவவழிபாடு இருப்பதைப்போல, மிதிலைநகரத்துப் பெண்கள் இராமனைத் தனித்தனி உருவமாக நினைவில் பதிந்து கொண்டார்கள்..பரந்த தோளைப் பார்த்தவர்கள் தோளை மட்டும் நினைத்துக்கொண்டார்கள்..தாமரைமலர்ப் பாதங்களைக் கண்டவர்கள், பாதங்களை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டார்கள்..நீண்ட கைகளைக் கண்டவர்கள்..கைகளை மட்டும் நினைவு செய்தார்கள்..வாள் போன்ற கூரிய விழிகளைக் கொண்ட அந்தப் பெண்கள் யாருமே இராமனின் முழு வடிவத்தை மனதில் நிறுத்திக் கொள்ளவில்லை..
.அவசரகதியில் பார்த்து ரசித்தார்கள் என்று நகைச்சுவையாக நாம் எடுத்துக்கொண்டாலும், அந்த வரிகளின் ஊடே ஒரு மறைப்பொருள் வைத்துப் பாடியிருக்கிறான் கம்பன்..
இராமனை, ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியை, செங்கண்மாலை,
ஒப்பில்லாத அப்பனை...முழு வடிவத்துடன் நினைத்து, ரசித்து,
வாழ்நாள் முழுக்க அவனை உரிமையோடு கொண்டாடுவதற்கு ஒருத்தி வரப்போகிறாள்..
மிதிலாநகரத்து அரண்மனைத்தெருவில், கன்னிமாடத்தில்
அவன் வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாள்..
ஆகவே பெண்களே...இராமனைக் கண்ணால் கண்டு ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லாமல்
சொல்லிவிட்டான் கவிச்சக்கரவர்த்தி கம்பன்...
See More
Like · ·

No comments:

Post a Comment