Monday, December 29, 2014

காதல் பிசாசே” என்றொரு தமிழ்த் திரைப்பாடல் இருக்கிறது..
கேட்பதற்கு நகைச்சுவையாக இருக்கும்...பிசாசு உடம்புக்குள்
புகுந்துவிட்டால் என்னவெல்லாம் செய்யும்..?!
காதல் வயப்பட்ட மனசும் அப்படித்தான்...சொல்லவும்
முடியாமல், மெல்லவும் முடியாமல் அது ஒரு மென்சோகம்...!...
‘நாம்காதல் கொண்டார் நமக்குஎவன் செய்யவோ
தாம்காதல் கொள்ளாக் கடை...” என்பான் வள்ளுவன்.
நாம் ஒருவரை நேசிப்பதும், அவரால் நாம் நேசிக்கப்படுவதும்
வாழ்நாள் கொடுப்பினை...!
சீதையே ஆனாலும் அவளும் ஒரு பெண்தானே...இராமனைக்
கன்னிமாடத்திலிருந்து, நோக்கிய அந்த நிமிஷத்திலிருந்து
அவளால் இயல்பாக இருக்கமுடியவில்லை...சீதை காதலில்
உருகுகிற பலபாடல்களைக் கம்பன் நமக்குக் கொடுத்து
இருக்கிறான்..அப்படியொரு பாடல் இது..
வெளிநின்றவரோ போய் மறைந்தார்; விலக்க ஒருவர்தமைக் காணேன்
எளியன் பெண் என்று இரங்காதே எல்லி யாமத்து இருளூடே
ஒளி அம்பு எய்யும் மன்மதனார் உனக்கு இம்மாயம்
உரைத்தாரோ
அளியென் செய்த தீவினையே அன்றில் ஆகி வந்தாயோ...
பாலகண்டம்..மிதிலைப்படலம்.
அன்பின் பிரிவாற்றாது,தன் இணையைக்கூவியழைக்கும்
அன்றில் என்கிற பறவையைப்போல, நானும் இராமனை
எண்ணி உருகுகிறேன்...நான் என்ன பாவம் செய்தேன்..எளிய
பெண் என்றும் பாராமல் மன்மதன் , பகலில் வராமல் இரவு நேரத்தில் வந்து, என்மீது காதல் கணைத் தொடுக்கிறான்...
இராமன் இருந்த நிலையையும் இங்கே சொல்லியாகவேண்டும்...உதாரணத்திற்கு ஒரு பாடல்...
விண்ணின் நீங்கிய மின் உரு இம்முறை
பெண்ணின் நல் நலம் பெற்றது உண்டேகொலோ
எண்ணின் ஈது அலது என்று அறியேன் இரு
கண்ணினுள்ளும் கருத்துளும் காண்பெனால்..
பாலகாண்டம்..மிதிலைப்படலம்
மேகத்தில் ஒளிரும் மின்னலே பெண்ணுருக்கொண்டு
வந்ததோ என்று மயங்கினான்..அவன் கண்களில்
அவளைத்தவிர வேறெந்தப் பொருளுமே தோன்றவில்லை...
எந்தக்காலத்திலும் காதலைப்பற்றி எழுதுவதற்கு கவிஞர்கள்
சளைப்பதேயில்லை...அதிலும் கம்பன் காப்பியக்கவிஞன்..
கரும்பு தின்னக் கூலி வேண்டுமா கவிச்சக்கரவர்த்திக்கு..
See More
Like · ·

No comments:

Post a Comment