ஐம்பெருங்காப்பியங்கள் முழுவதுமே சமண, பெளத்த
இலக்கியங்கள்தான்..சைவமும், வைணவமும் தமிழகத்தில், பண்டைக்காலத்தில் சிறப்புக் குன்றியிருந்தன.. மகேந்திரவர்மனுக்கு முன்னர் இருந்த பல்லவர் ஆட்சிக் காலத்திலும், களப்பிரர் ஆட்சிக்காலத்திலும், சமண, பெளத்த மதங்கள்தான் தழைத்தோங்கியிருந்தன.. ... சமணம் என்பது மருவி வழங்கப்படும் பெயர்..சரியான பெயர் அமணம் என்பதாகும்..ஆடையணியாதவர்கள் என்று பொருள்..சமணத்துறவிகளைத் திகம்பரச்சாமியார்கள் என்று நம்மூரில் அழைப்பார்கள்..கும்பகோணத்தின் அருகிலிருக்கும் அம்மன்குடி ( பண்டைய பெயர் அமண்குடி) சமணர்கள் அதிகம் வாழ்ந்த ஓர் இடம்.. எந்த மதத்தைச் சார்ந்த இலக்கியமாக இருந்தாலும், கடவுள் வாழ்த்துப்பாக்கள் கண்டிப்பாக இருக்கும்..குறிப்பாக .. சிலப்பதிகாரத்தில் “ஞாயிறு போற்றுதும், திங்கள் போற்றுதும்..”போன்ற பாடல்கள் இயற்கை வாழ்த்துப்பாடல்கள்.. கம்பராமாயணத்தில் சூரியனையும், சந்திரனையும் விதவிதமாக வர்ணிக்கிறான் கம்பன்..” வெய்யோன், வெயிலோன், செங்கதிர், பரிதி,ஞாயிறு, பகலவன், கதிரவன், மின்னொளிர்...என்றெல்லாம் பகல் வெளிச்சத்தையும்...” பூர்ண சங்திரன், வான்மதி, முழுமதி, நிலவோன். வானம் கைவிளக்கு எடுத்தது என்ன வந்தது கடவுள் திங்கள்...” என்று சந்திரனையும் பல பாடல்களில் பாடுகிறான் கம்பன்..எத்தனை பாடல்களில் பாடியிருக்கிறான் என்பதை மட்டுமே ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் வாங்கிவிடலாம்...! கம்பனின் இராமகாதையில் சூரிய ஒளியும். சந்திர ஒளியும் ஒரு கதாபாத்திரமாகவே வழிநெடுக வருகிறது கம்பராமாயணத்தைப் பற்றிப் பேசும்போதெல்லாம் நான் இந்தப்பாடலைத்தான் மேற்கோள் காட்டுவேன். கம்பரசத்தில் என் மனதைப் பறி கொடுத்தது இந்தப் பாடலைப் படித்த பிறகுதான்..! வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறைய பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான் மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகுடையான்... அயோத்தியா காண்டம்..கங்கைப்படலம். ” இவனது திருமேனி மையைப் போன்றதோ..மரகதமணியைப் போன்றதோ...அலை மடங்கும் கடலைப் போன்றதோ... மழை வழங்கும் கருமேகம் போன்றதோ...என்ன அற்புதமான வடிவம் இது...” என்று பாராட்டத்தக்க இணையற்ற, அழியாத அழகையுடையவனான இராமன் சூரியனது ஒளி தனது உடம்பிலிருந்து வரும் ஒளிக்குள் ஒளிந்துகொள்ள, “இடை உண்டு” என்பது பொய்யோ என்று எண்ணும்படியான நுண்ணிய இடையை உடைய சீதையோடும், தம்பி இலக்குவனோடும் நடந்து போனான்... வெயில் நம்மை எப்படிச் சுட்டெறித்தாலும், அதை நொந்து கொண்டே நம் வாழ்க்கையை ஓட்டிவிடுகிறோம்..சூரிய சக்தி நம்மீது படவில்லையென்றால் விட்டமின் டி குறைபாடு வந்துவிடும்..சூரிய நமஸ்காரத்தின் தாத்பரியமே அதுதான். நமக்குத் தெரியாதா என்ன...?! அவனன்றி ஓர் அணுவும் அசைய முடியாதென்று...:) :) See More |
![]() |
No comments:
Post a Comment