Thursday, January 8, 2015

ஐந்து என்ற எண்ணுக்கு சைவத்தில் மிகுந்த முக்கியத்துவம் உண்டு..சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபவம், அனுக்ரஹம்…இந்த ஐந்து செயல்களையும் எம்பெருமான் நிகழ்த்துவதால் “நமசிவாய” என்கிற பஞ்சாட்சர மந்திரத்தால் அவனைத் துதிக்கிறோம்…! இயற்கையும், நம் உடலும் பஞ்ச பூதங்களால் ஆனது..

அப்பு….(நீர்)
வாயு…(காற்று)
தேயு…( நெருப்பு)
பிருத்வி…(மண்)
ஆகாசம்…( ஆகாயம்)...

இந்த பஞ்ச பூதங்களுக்கும் ஐந்து ஸ்தலங்களை…பஞ்ச பூத க்ஷேத்திரங்களாகச் சைவம் வரையறுத்திருக்கிறது…

அப்பு….ஜம்புகேஷ்வரர் திருக்கோயில், திருவானைக்காவல்..திருச்சிராப்பள்ளி

அப்பு லிங்கத்தின் அடியில் எப்போதும் நீர் சுரந்து கொண்டேயிருக்கும்..காவிரியில் நீர் வரத்து அதிகமானால் கருவறையிலும் நீர்மட்டம் அதிகமாகும்…திருவானைக்கா மாடக்கோயில் வகையைச் சார்ந்தது..யானை உள்ளே புகாவண்ணம் கருவறை சிறியதாக, தரைமட்டத்திற்குக் கீழே அமைக்கப்பட்டிருக்கும்…சோழமன்னன் கோச்செங்கணான் இதே போன்று 78 மாடக்கோவில்கள் கட்டினான் என்பார்கள்..அன்னை அகிலாண்டேஸ்வரியிடம் என்ன கேட்டாலும் கிடைக்கும்..தாயுமானஸ்வாமியும், காளமேகப்புலவரும் தன்னை உணர்ந்து கொண்ட இடம் திருவானைக்கா.. எனக்குக் குழந்தை பிறக்க வேண்டுமென்று அன்னையின் பிரகாரத்தை 21 செவ்வாய்க்கிழமைகள் வலம் வந்தார் என்னுடைய தாயார்…இதில் சந்தேகமேயில்லை..அன்னை எனக்களித்த அருட்கொடைதான் என் மகன்..!

வாயு….காளஹஸ்தி, தமிழக, ஆந்திர எல்லையில்…திருப்பதிக்குப் போகும் வழியில் இருக்கிறது…

கருவறைக்குள் காற்று அடிப்பதை நாம் கண்ணால் பார்க்க முடியும்..தொங்கும் விளக்குகள் ஆடும்…! திண்ணன் என்கிற வேடனை கண்ணப்ப நாயனாராக காளத்திநாதன் ஆட்கொண்ட இடம்..திருக்காளத்தி..எனக்குத் தெரிந்து முதன்முதலில் கண்தானம் செய்தவர் கண்ணப்ப நாயனார்தான்..அதுவும் எம்பெருமானுக்கே கண்தானம் செய்தவர்…!

தேயு…திருவண்ணாமலை..வடமொழியில் அருணாசலம், அருணகிரி

கார்த்திகை தீபத்தன்று, அண்ணாமலையில் ஏற்றும் மகாதீபம்..இறைவன் ஜோதி ஸ்வரூபமாக இருக்கிறான் என்பதற்கான தாத்பர்யம்…! அண்ணாமலை..இன்றளவும் முனிவர்களும், சித்தர்களும் வசிக்கும் மர்மமலை…இந்த மலையைக் கிரிவலம் வந்து தன்னையறிந்து கொண்டவர்கள்..இரமண மகரிஷி, சேஷாத்திரி ஸ்வாமிகள், ஞானானந்தகிரி, யோகி ராம்சுரத்குமார்…இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ பேர்…!

”ஆதியும் அந்தமுமில்லா அருட்பெருஞ்சோதியை யாம் பாடக் கேட்டேயும்…” என்று திருவெம்பாவையை, அண்ணாமலையில்தான் அரங்கேற்றினார் மாணிக்கவாசகப் பெருமான்..அருணகிரிநாதருக்கு கந்தப்பெருமான் காட்சிக் கொடுத்த இடம் அண்ணாமலை..!

பிருத்வி..கச்சி ஏகாம்பரேஷ்வரர்…காஞ்சிபுரம்..

அன்னை உமையவள்.. மண்ணால் இலிங்கம் செய்து வழிபட்ட இடம்…மூலவர் மண் என்பதால் அபிஷேகம் கிடையாது..உற்சவர் சோமாஸ்கந்த மூர்த்தி..எம்பெருமான்..அன்னையோடு, கந்தப்பெருமானை மடியில் அமர்த்தியிருக்கும் கோலம்…கச்சியம்பேடு, கச்சிமேற்றளி என்றெல்லாம் கல்வெட்டுகளில் இந்த ஆலயம் குறிப்பிடப்படுகிறது..பல்லவர்களின் தலைநகரமாக இருந்ததால், நகரேஷு காஞ்சி என்று போற்றப்பட்டது..பல்லவர்களும், சோழர்களும் போட்டி போட்டுக்கொண்டு திருப்பணி செய்திருக்கிறார்கள்…அன்னை காமாட்சியாகத் தனியே தவம் செய்கிறாள்…

ஆகாசம்…தில்லை திருச்சிற்றம்பலம்….சிதம்பரம்..

சோழ மன்னர்களுக்கு தில்லை சிற்சபேசன்தான் குல தெய்வம்…முதலாம் பராந்தக சோழன் கருவறை விமானத்துக்கு பொற்கூரை வேய்ந்தான்..அவனுக்கடுத்து வந்த மன்னர்களும் தில்லைக்கு ஏகத்துக்கும் திருப்பணி செய்திருக்கிறார்கள்..இரண்டாம் குலோத்துங்க சோழன்..(கி.பி.1133-1150) அம்பலவாணனின் அத்தனை கோபுரங்களுக்கும் பொன்வேய்ந்த செய்தி கல்வெட்டில் காணக் கிடைக்கின்றது..தற்காலத்தில் கருவறை விமானம் மட்டும் பொற்தகடு வேயப்பட்டிருக்கிறது…சேக்கிழார் பெருமான் ( கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு..மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிக்காலம்)

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்… என்று ஆரம்பித்து தன்னுடைய பெரிய புராணத்தைத் தில்லையில் அரங்கேற்றினார்…சிதம்பர ரகசியம் என்று சொல்வார்கள்.. அந்த ரகசியத்துக்கு ஒன்றுமில்லை என்று பொருள்..! ஆதியும், அந்தமுமில்லாத அருட்பெருஞ்சோதியை, உருவெளி இல்லாத வெட்டவெளியில் உணர்ந்து கொள்வதுதான் சிதம்பர ரகசியம்…! தில்லையில் ஆடல்வல்லான் இடது பதம் தூக்கியாடும் நடனத்துக்கு ஆனந்தத் தாண்டவம் என்று பெயர்.. கம்பராமாயணத்தை முடித்துவிட்டு, பன்னிரு திருமுறைகள் பற்றி எழுத இருக்கிறேன்..அப்போது எம்பெருமானின் எழுவகைத் தாண்டவங்களையும் விளக்கி எழுதுகிறேன்..சைவத்தில், தில்லைவாழ் அந்தணர்கள் என்று வழங்கப்படும் தீக்ஷிதர்களுக்குத் தான் முதல் மரியாதை…சுந்தரமூர்த்திநாயனார் தான் எழுதிய திருத்தொண்டத் தொகையை, “ தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்…” என்றுதான் ஆரம்பிக்கிறார்… நந்தனார் என்கிற திருநாளைப் போவார் நாயனாரை எம்பெருமான் ஆட்கொண்ட இடம் தில்லை..! பூலோகக் கைலாயம் என்று சைவர்களால் போற்றப்படுகிறது…!

இராமாவதாரத்தில், பஞ்சபூதங்களுக்கும் நிறைய இடங்களில் சிறப்புச் செய்திருக்கிறான் கம்பன்..

இராமன் மாயமானாக வந்த மாரீசனை வதம் செய்கிறான். மாரீசன் உயிர் நீங்கும் தறுவாயில் இராமனது குரலில், “ ஓ சீதா…இலட்சுமணா…” என்று ஓலமிட்டுக்கொண்டே விழுந்து இறக்கிறான்..அதைக் கேட்ட சீதை, இராமனுக்கு ஏதோ தீங்கு நேர்ந்து விட்டதாக எண்ணி அழுகிறாள்..இலக்குவன் அவளைத் தேற்றுகிறான்…

பார் என, கனல் என, புனல் என, பவனம், வான்
பேர் எனைத்து அவை அவன் முனியின் பேருமால்
கார் எனக் கரிய அக் கமலக் கண்ணனை
யார் எனக் கருதி இவ் இடரின் ஆழ்கின்றீர்.
ஆரணியக் காண்டம்… சடாயு உயிர் நீத்த படலம்.

”நிலம், என்றும், நெருப்பு என்றும், நீர் என்றும், காற்று என்றும், ஆகாயம் என்றும் வெவ்வேறு பெயர்களைக் கொண்டவை இவ்வுலகில் எத்தனை உண்டோ, அவை அனைத்தும் இராமன் சினம் கொண்ட கணத்தில் நிலை குலையும். கருமேகம் போன்ற திருமேனியையுடைய, தாமரை மலர் போன்ற கண்களைக் கொண்ட இராமனை யார் என்று நினைத்து இந்தத் துயரத்தில் மூழ்குகிறீர்?..” என்று இலக்குவன் சீதையைத் தேற்றுகிறான்..

தோழிகள்.. நேரங்கிடைக்கும் போது பஞ்ச பூத க்ஷேத்திரங்களுக்குச் சென்று, தரிசனம் செய்து, எம்பெருமான் அருள் பெற்று பிறவிப்பயன் அடைவீர்களாக….:) :)
See More
27 August
10:30

No comments:

Post a Comment