நம்முடைய புராணங்களில் பறவைகளின் அரசனாக கருடன் போற்றப்படுகிறான்..மனித முகமும், கழுகின் உடலுமாக கருடன் சித்தரிக்கப்படுகிறான்..திருமாலின் வாகனமாக, கருடத்தாழ்வார் என்று கருடனை வைணவர்கள் கொண்டாடுகிறார்கள்..பூலோகவைகுண்டமாம்..திர
செம்மண் நிற இறக்கைகளைக் கொண்டு, உடலின் நடுப்பாகம் வெண்ணிறம...ாக உடைய செம்பருந்தை( Brahminy Kite) இப்போது நாம் கருடன் என்று சொல்கிறோம்.. எந்தக் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தாலும், ராஜ கோபுரத்துக்குப் புனித நீரால் அபிஷேகம் செய்யும்போது, எங்கிருந்தோ சரியாக அந்த நேரத்திற்கு, அந்த இடத்தில் கருடன் வந்து வட்டமிடுகிறது..! நாம் எப்போதும் பார்க்கின்ற அதிசயம்..! இதற்கு விஞ்ஞானரீதியான காரணம் ஏதேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை.. காஞ்சிபுரத்திற்கருகில் உள்ள திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் மலையில், நாள்தோறும் உச்சிப்பொழுதின் போது, இரண்டு வெள்ளைநிறப் பருந்துகள் (Egyptian Vultures) வந்து அர்ச்சகர் கையால் உணவு உண்கின்றன...இது தினமும் காணக் கிடைக்கின்ற அரிய காட்சி..! திருவானைக்காவில் இருக்கும் என் அம்மா வீட்டுக்குத் தினந்தோறும் ஒரு மயில் வருகிறது..வேர்க்கடலையும், பொட்டுக்கடலையும் வைத்தால் குதூகலமாய்க் கொறித்து விட்டுச் செல்கிறது..! நான் எங்கு வசித்தாலும், என் வீட்டில் பறவைகள் கூடு கட்டுகின்றன..தில்லியில் வசித்தபோது; புறாவும், குருவியும் கூடு கட்டும்..இங்கே சென்னையில் என் வீட்டுப் பால்கனியில் புறா கூடு கட்டுகிறது..அது வசிக்கிற இடத்தில் என் கூட்டை (வீட்டை) நான் கட்டியிருக்கிறேன்..பாவம்.. அது எங்கே போகும் என்று நினைத்துக் கொள்வேன்.. சென்னையில் செல்ஃபோன் டவர்களிலிருந்து வரும் கதிர்வீச்சால் பறவைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.. குருவி, கிளி போன்றவை காணாமலே போய்விட்டது..இதோ நான் கணினியில் தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போது, ஒரு புறா விண்டோ ஏசி மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறது..! கோடைக்காலங்களில் மொட்டைமாடியில் பாத்திரத்தில் நீர் வைத்து, பறவைகளின் தாகம் தணிக்க நாம் உதவலாம்.. இராமாயணத்தில் கருடனின் பெயர் ஜடாயு..தசரதனின் நண்பனாகச் சித்தரிக்கப்படுகிறான்..பஞ்சவடியில் ராமனும், இலக்குவனும், சீதையும் ஜடாயுவைச் சந்திக்கிறார்கள்.. கேட்டு உவந்தனன் கேழ் கிளர் மெளலியான் தோட்டு அலங்கலினீர் துறந்தீர் வள நாட்டு, நீர் இனி நண்ணுதல்காறும் இக் காட்டில் வைகுதிர் காக்குவென் யான் என்றான்.. ஆரணியக் காண்டம்...சடாயு காண் படலம். ஒளி விளங்கும் மகுடத்தை உடைய ஜடாயு, இது காறும் நடந்த விஷயங்களை இலக்குவன் கூறக்கேட்டு மகிழ்ந்தான்..பின்பு, “பூ மாலை அணிந்தவர்களே..உங்கள் நாட்டைத் துறந்து வந்தீர்கள்..நீங்கள் மீண்டும் நாட்டை அடையும் வரை இந்தக் காட்டிலே தங்கியிருங்கள். நான் உங்களைக் காப்பேன்..” என்றான்.. இராமாயணத்தைக் கூர்ந்து கவனித்தால் நமக்கொரு விஷயம் நன்கு விளங்கும்..மனிதர்களுக்கு இணையாக, பிற உயிரினங்களும் முக்கிய கதாபாத்திரங்களாக வலம் வருகின்றன...பறவையினப் பிரதிநிதியாக ஜடாயு, வானரப் பிரதிநிதிகளாக வாலி, சுக்ரீவன், அனுமன், அங்கதன்..கரடியினப் பிரதிநிதியாக ஜாம்பவான்..என்று சொல்லிக் கொண்டே போகலாம்..காக்கை, குருவி எங்கள் ஜாதி என்று சொன்னானே பாரதி..அது எப்பேர்ப்பட்ட உண்மை..இயற்கையோடு இணைந்து நாம் வாழ்ந்தால், எல்லா உயிரினங்களின் ஸ்னேகமும் நமக்குச் சாத்தியமே... :) :) See More |
Bagavathi Ganesh wrote on Harikrishnan Ravichandran's Timeline.
09:22 |
Happy Birthday Harikutta..:)
|
Bagavathi Ganesh wrote on Padmini Ravi's Timeline.
05:48 |
pappy..Hari is not in Facebook..?
Please convey him my birthday wishes.
|
No comments:
Post a Comment