புராணங்களிலும், காவியங்களிலும் குறிக்கப்படும் மேரு.. மகாமேரு, மந்திர மலை...என்றும் வழங்கப்படுகிறது...
தேவர்களும், அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைவதற்காக இந்த மலையை மத்தாகப் பயன்படுத்தினார்கள் என்கிறது புராணங்கள்.. கடல் கொண்ட குமரிக்கண்டத்தில் மேருமலை இருந்ததாகவும், அம்மலையிலிருந்துதான் குமரியாறு, பஃறுளியாறு போன்ற ஆறுகள் உற்பத்தியானதாகவும் பண்டைய தமிழ் இலக்கியங்கள் செப்புகின்றன... “சூழ்கடல்... வளை இய வாழ்யங் குன்றத்து நடுவு நின்ற மேருக் குன்றமும்......மணிமேகலை. இடை நின்றோங்கிய நெடுநிலை பெளவமும் மேருவில்....சிலப்பதிகாரம். மேருமலையின் தென்கோடியில் அமைந்த நாவலந்தீவு(பாரத தேசம்) என்று மணிமேகலையில் குறிப்பு வருகிறது.. இந்த பூலோகம் ஒரு எலுமிச்சம் பழம் என்று வைத்துக் கொண்டால், அதன் உச்சியில் உள்ள புள்ளி மேரு சிகரம்...அந்த உச்சிக்கு எந்தப் பக்கமும் தெற்குதான்..உச்சியிலிருந்து கிழக்கேயோ, மேற்கேயோ, வடக்கேயோ...எங்கே போவது...?எங்கேயும் போக முடியாது..பூமியில் உள்ள எல்லா தேசங்களுக்கும் வடக்கு மேருதான்.. ‘ ஸர்வேஷாமபி வர்ஷாணாம் மேரு உத்தர ஸ்தித...” என்பதற்கு இதுதான் அர்த்தம்...(ஸ்ரீ மகாப்பெரியவாளின்.. ”தெய்வத்தின் குரல்” ) இந்து மகாசமுத்திரத்தில் மிக நீண்ட மலைத்தொடர் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்...வட துருவத்துக்கு ஸூமேரு என்றும், தென் துருவத்துக்கு குமேரு( குமரி முனை) என்றும் பெயர்... ஸூமேரியா தேசம்..ஸூமேருவிலிருந்து வந்ததுதான்...ஆப்பிரிக்காவின் தான்சானியாவில் கிளிமாஞ்சாரோ மலைச் சிகரத்திற்கு, அருகில் உள்ள ஒரு உயர்ந்த மலையின் பெயரும் மேருதான்..! இந்தோனேஷியாவின் ஜாவாத்தீவிலுள்ள உயர்ந்த மலையின் பெயர் செமேரு..! கம்போடியா நாட்டின் அங்கோர்வாட் கோவில்..மேரு மலையின் குறியீடு என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.. தஞ்சை இராஜராஜீஸ்வரத்தின், கருவறை விமானத்தை தக்ஷிண மேரு என்பார்கள்.. மேருவைப் பற்றிய தமிழர்களின் கணிப்பு உண்மை என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது...இராமாயணம்..க கம்பராமாயணத்தில் மேருவைப் பற்றிய குறிப்புகள் பல இடங்களில் வருகின்றன...சீதையைத் தேடிக்கொண்டு இராமனும் இலக்குவனும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்..அப்போது மலையைப்போல, கரிய நிறமுடைய கவந்தன் என்னும் அரக்கன் அவர்களைத் தடுக்கிறான்... வெயில் சுடர் இரண்டினை மேரு மால வரை குயிற்றிய ஆம் எனக் கொதிக்கும் கண்ணினன் எயிற்று இடைக்கிடை இரு காதம் ஈண்டிய வயிற்றிடை வாய் எனும் மகர வேலையான்... ஆரணியக் காண்டம்....கவந்தன் படலம். அந்தக் கவந்தன், வெம்மையை உடைய இரண்டு சூரியரைப் பெரிய மேருமலை தன்னில் பதித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லும்படி கொதிக்கின்ற கண்களைக் கொண்டவன்...ஒரு பல்லுக்கும், மற்றொரு பல்லுக்குமிடையே இரண்டு காத தூரம் உள்ள பற்களைப் பெற்றவன்...வயிற்றுக்கு நடுவில் வாய் என்று கூறப்படும் சுறாமீன்களை உடைய கடலைப் பெற்றவன்... உடலில் வலு இருக்கும்போதே கயிலாய யாத்திரை மேற்கொள்ள வேண்டும்...என் வாழ்வின் குறிக்கோளே அதுதான்..இன்றைய தேதியில் ஒருவர் சென்று வர இலட்சரூபாய் ஆகிறது..இறைவனின் இருப்பிடத்தைத் தரிசனம் செய்யவேண்டும் என்கிற இலட்சியத்தை விடவும் இலட்சம் பெரிசா என்ன...:) :) See More |
August 2014
31 August
Bagavathi Ganesh updated her status.
21:14 |
ஐந்து என்ற எண்ணுக்கு சைவத்தில் மிகுந்த முக்கியத்துவம் உண்டு..சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோ
|
No comments:
Post a Comment