Wednesday, March 4, 2015


வெள்ளமாய் ஓடும் குருதியாற்றைக் கண்டு, இலங்கை நகரமே நிலைகுலைந்து அலைந்தது…. அழுகைக்குரல் எங்கும் மேலோங்கியதுஅரக்கர்களுடைய வலிமை அழிந்தது என்று நினைத்து, அறமும் தளிர்த்தது….

 

இராவணனுடைய ஒப்பில்லாத பெரிய அரண்மனைக்குள் புகுந்த காவல் வீர்ர்கள், பேசும் வலிமையிழந்தவராய் வெருவி விம்முவார்

ஐயாநம்மவரான அரக்கர் அனைவரும் இறந்தனர்சம்புமாலியும் அழிந்தான்இத்துணை பேரையும் அழித்தது  ஒரேயொரு குரங்குதான்…! “ என்றனர்இந்தச் செய்தியைக் கேட்ட இராவணன், விழிகளின் வழியே உதிரக்குமிழ் உமிழ்கின்றான்….

நீவீர் சொன்ன அந்தக் குரங்கை யானே கடிது தொடர்ந்து     பிடிப்பேன்…” என்றான்

 

இதனை உணர்ந்த சேனைத்தலைவர் ஐவர்பஞ்ச சேனாபதிகள் எனப்படுவர்….விருபாட்சன், பூபாட்சன், துர்த்தரன், பிரகஸன், பாசகர்ணன்.. ஆகியோர், இராவணனை நோக்கி, “ திறலோய்சிலந்திப் பூச்சியைப் பிடித்துத் தின்று, உயிர் வாழும் அற்பப்பிராணியான ஒரு குரங்கின் மேல் போர் செய்ய நீ போவாயானால்; அது உன் வீரத்துக்கு இழுக்குமும்மூர்த்திகளும் உன்னைப் பரிகசிப்பார்கள்ஆகவே எங்களைப் போருக்குச் செல்ல அனுமதிப்பாய்…” என்று கைதொழுது இறைஞ்சினர்….இலங்கேஸ்வரனும் இசைந்தான்

 

படைவீர்ர்கள்தம் மகளிர் மறுகி, “ குரங்கின் முன் ஒருவர் புக்கு மீண்டிலர்…” என்று அரற்றி, அவர்களை மேற்செல்ல விடாமல் தடுத்தனர்….பஞ்ச சேனாபதிகள் ஐவரும், பெரும் பூதம் ஓர் ஐந்தும் ஒத்து  அமைந்தார்…. கடல் போன்ற சேனைக்கு நடுவே போய்ச் சேர்ந்து கொண்டனர்

 

அநுமன் அவர்களை ஏமாற்ற குருகிய உருவிலிருந்தான்… பஞ்ச சேனாபதிகள் அநுமனைப் பார்த்து, “ புல் தலை குரங்கு இது போலும்…பெரிய போரில் வெற்றி கொண்டது..?! விண்ணவர் புகழை வேர் ஒடும் தின்ற வல் அரக்கரைத் திருகித் தின்றது இந்தக் குரங்கா…?!..” என்று ஐயங்கொண்டனர்… அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, உயர்ந்த ஆகாயத்தையும் கடந்து செல்லுமாறு பேருரு எடுத்து நின்றான் அநுமன்…!

 

பெருவடிவு கொண்டு நின்ற மெய்யமால் அடிமையை, ஐயனை, அஞ்சனை மைந்தனை…வியந்து நோக்கினர்..சினம் மிகுந்து, அவன் மேல் அனற்பொறிகளை எய்தனர்…அநுமனின் அடர்ந்த உரோமக் கூட்டங்களில் போய் தாக்கியதில், தினவு தீர்வு உற சொறிந்தன போல் இருந்ததாம் அநுமனுக்கு…! அதனால் மெய்மறந்து அயர்வது போல் அமைதியுற்றிருந்தான்…

 

அரக்கர் நெருங்கி வந்து தாக்கினர்…அங்கிருந்த ஓர் எழுவைக் கையில் எடுத்துக் கொண்டான் அநுமன்…தேர்களைத் தாக்கினான்.. கரியை, பரியைப் புரட்டிப் போட்டான்…இரத, கஜ துரக பதாதிகள் அத்துணையும் வடவாக்கினித் தீயில் எரிந்து பஸ்பமாகி விட்டதோ என்று நினைக்கும்படியாக…ஒட்டுமொத்த சேனையும் அழிந்துவிட்டது…

 

வடவை என்பது கடலில் உள்ள நீர் கொந்தளித்து எழாதபடி, அந்நீரைச் சுவறச் செய்யும் தீயைத் தன் முகத்திற் கொண்டுள்ளதாய்க் கடவுளால் அமைக்கப் பெற்ற ஒரு பெண்குதிரை என்று இலக்கியங்கள் கூறும்….

 

அநுமனோடு சமருக்கு வந்த ஐவரில்..ஒருவனை எழுவாலும், ஒருவனை மிதித்தும், இருவரை வானத்தில் எறிந்து அவர் தோள்களை இறுத்தும், ஒருவனைத் தலை மீது குதித்தும்…சம்ஹாரம் செய்தான்…

 

பஞ்ச சேனாபதிகளின் வதைச்செய்தி இராவணனுக்கு எட்டியது..கொடுந்தீ கிளர்ந்து எழும் உயிர்ப்பன் ஆகி, போருக்குக் கிளம்ப ஆயத்தமானான்…அப்போது அவனுடைய மைந்தனான அக்ககுமாரன் அவன் தாள் தொழுது, “ யான் சென்று அக்குரங்குடன் போர் புரிய இடை தருதி..” என்றான்…இராவணன் அக்ககுமாரனை வாழ்த்திப் போருக்கு அனுப்பி வைத்தான்…

 

வெள்ள வெம் சேனை சூழ, தேன் சொரியும் மாலையணிந்த அக்ககுமாரனை, காற்றின் சேய் வரவு கண்டான்… குருகிய உருவிலிருந்த மாருதியைப் பார்த்து நகைத்தான் அக்ககுமாரன்… அவனுடைய தேர்ச்சாரதி அவனிடம் எச்சரிக்கை செய்தான்…” வாலியிடம் அடி வாங்கியவன் நம் மன்னவன் என்பதை நினைவில் கொள்.. இவன் தோற்றத்தைக் கண்டு ஏமாந்து விடாதே…” என்றான்…

 

அக்ககுமாரன் வஞ்சினத்தோடு அனுமனை எதிர்த்தான்…அநுமன் பேருருக் கொண்டபோதுதான்  அவனுக்கு உண்மையுறைத்தது….அநுமன் உடலின் உரோமங்கள்..நீண்ட வேல்கள் போல அக்ககுமாரன் உடலெங்கும் போய்ப் பதிந்து உட்புக, அநுமனுடைய நீண்ட வால் அவனுடம்பைச் சுற்றிக்கொண்டது….அக்ககுமாரனைத் தன் கையால் எற்றி,  விண்ணோடு மண் காண அரைத்து, உருவில்லாமற் சேறாக்கினான்…அக்ககுமாரன் பொடிப்பொடியாய் உதிர்ந்து போனான்…. அக்ககுமாரன் வதம்…எம்பெருமான், நரசிம்ம அவதாரத்தில் இரணியனை வதம் செய்தது போலிருந்தது என்கிறான் கம்பன்….

 

” உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்

என்னையும் உன்னிலிட்டேன்

என்னப்பா..  இருடீகேசா..

என்னுயிர்க் காவலனே….!...”

…பெரியாழ்வார்… பெரியாழ்வார் திருமொழி….

No comments:

Post a Comment