Friday, October 16, 2015


அன்புடையாரைப் பிரிவுறும் நோயது….!

உன்னதமான ஒரு காதல் கதையை எழுதப்போகிறேன்அதற்காக, கோதையின் வரியைத் தலைப்பாக எடுத்துக்கொண்டேன்….! திருவரங்கத்தில் அரங்கன் சந்நிதிக்கருகில் இருக்கும் துலுக்க நாச்சியாரைப் பற்றி எழுதவேண்டுமென்று எப்போதும் நினைப்பேன்இன்றுதான் வேளை வந்திருக்கிறது…!

 

துலுக்க நாச்சியாரைப் பற்றிய சில வலைப்பதிவுகளை இணையத்தில் படிக்க நேர்ந்ததுஎன்னவொரு கொடுமை…? துலுக்க நாச்சியார், மாலிக்காபூரின் மகள் என்றெல்லாம் எழுதிவைத்திருக்கிறார்கள்மாலிக்காபூர் ஒரு திருநங்கை…! ஒரு வரலாற்று நிகழ்வைப் புராணக்கதையாக ( புனைவு ) எப்படி எழுத முடிகிறது…? படித்து நொந்து போய்விட்டேன்…!

 

உள்ளது உள்ளபடியே எழுதவேண்டும் என்பதற்காக மிகவும் மெனக்கெட வேண்டியிருந்தது…. ஸ்ரீராமானுஜர் சரிதம், மேல்கோட்டை மற்றும் ஹொய்சளர்களின் வரலாற்று ஆவணங்களைப் படித்தேன்

 

ஸ்ரீராமானுஜர்:

வாராது போல் வந்த மாமணியாய்

வந்துதித்து வைணவத்தை

வாழ்விக்க வந்த எம்மான்

எம்பெருமானார்உடையவர்எதிராஜர்திருப்பெரும்புதூரில் தோன்றிப் புகழொடு தோன்றியவர்ஜகத்குரு ஸ்ரீஆதிசங்கரரின் அத்வைத மார்க்கத்திலிருந்து, சற்றே வேறுபட்டு விசிஷ்டாத்வைத மார்க்கத்தைப் பரதகண்டமெங்கும் பரப்பியவர்நூற்றியிருபது ஆண்டுகள் பரமனுக்குக் கைங்கர்யம் செய்து பரமபதம் அடைந்தவர்தானான திருமேனியாய், திருவரங்கத்தில் தனிப்பெரும் சந்நிதி அமையப் பெற்றவர்….! உடையவரைப்பற்றிப் பேசுவதும், எழுதுவதும் பெரும்பேறு…!

 

சோழநாட்டில் குலோத்துங்கனின் ஆட்சிக்காலத்தில் ( எந்த குலோத்துங்கன் என்பதில் இன்றளவும் சர்ச்சை நிலவுகிறது ) சைவ, வைணவப் பூசல்கள் உச்சக்கட்டத்தில் இருந்தன.. முதலாம் குலோத்துங்கனாகக் ( கி.பி. 1070—1122 ) கூட இருக்கலாம் என்பது என்னுடைய ஊகம்….என்னுடைய ஊகத்திற்கு சில அடிப்படைக் காரணங்கள் உண்டுஉடையவர் 1017—இல் அவதரித்தவர்தன்னுடைய 83 வது வயதில் திருவரங்கத்தை விட்டு நீங்கி, மேல்கோட்டை சென்றார் என்கிறார்கள் வரலாற்றாய்வாளர்கள்அதன்படி பார்த்தால் 1100- ஆம் ஆண்டு அவர் கர்நாடகா சென்றிருக்க வேண்டும்அப்போது சோழநாட்டை அரசாட்சி செய்தது முதலாம் குலோத்துங்கன்தானேஆனால் வைணவ குருபரம்பரைக்கதைகளில் வரும் கிருமி கண்ட சோழன் யார் என்று தெரியவில்லை

 

ஸ்ரீராமானுஜரின் உயிருக்கும், வைணவப்பணிக்கும் ஊறு நேருமோ என்று அஞ்சி, வைணவப்பெரியோர்கள் அவரை மேல்கோட்டை சென்று, ஹொய்சாளர்களின் பாதுகாப்பில் தங்கும்படி பணித்தார்கள்….ஸ்ரீராமானுஜர் மேல்கோட்டையில் இருபது ஆண்டுகள் தங்கியிருந்ததாக வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்அதாவது 113 வயது வரை அங்கே இருந்திருக்கிறார்இருபது ஆண்டுகள் அங்கு அவர் செய்த சேவை, ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் ஆச்சரியமாகப் பேசப்படுகிறது என்றால் அவர்தம் பெருமை எத்தகையதன்றோ…?!

 

மேல்கோட்டை ( பண்டைய பெயர்: திருநாராயணபுரம் )

கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து, முப்பது கி.மி. தொலைவில் இருக்கிறதுநூற்றியெட்டு திவ்யதேசங்களுள் இதுவும் ஒன்று….எம்பெருமானின் திருநாமம் செல்வ நாராயணன்செல்லமாகக் கூப்பிடும் பெயர் செல்லப்பிள்ளை…! ஸ்ரீராமானுஜர் அங்கு தங்கியிருந்த காலத்தில், ஹொய்சாள மன்னனாக இருந்தவன் பிட்டிதேவன்.( கி.பி. 1108—1152 ) அவன் சமண சமயத்தைச் சார்ந்தவன்பட்டமகிஷியின் பெயர்.. ஷாந்தலா தேவி( பேரழகி என்கிறது சிரவணபெலகொலா கல்வெட்டு..! )வல்லாளன் என்றொரு மகனும், வசந்திகா என்ற மகளும் பிட்டிதேவனின் வாரிசுகள்லக்ஷ்மி என்ற பெயருடைய வைணவப்பெண்ணையும் மணந்து கொண்டான்

 

வசந்திகாவை பிரம்மராட்சஷி ( வழக்குத்தமிழில் பேய் பிடித்திருக்கிறது என்பார்கள் ) பிடித்திருந்தது…. மன்னன் மகளையெண்ணி மிகவும் வருந்தினான்சமண குருமார்களால் அந்நோயைக் குணப்படுத்த முடியவில்லை….இராமானுஜரிடம் வந்து தன் மகளைக் குணப்படுத்த வேண்டினான்.. தன்மகள் குணமடைந்து விட்டால், தான் வைணவத்தை ஏற்பதாகச் சொன்னான்….ஸ்ரீராமானுஜர் நாராயண வர்ம மந்திர உபாசனை செய்து வசந்திகாவின் நோயைக் குணப்படுத்தினார்மன்னன் வைணவத்திற்கு மாறி தன்னுடைய பெயரை விஷ்ணுவர்த்தனன் என்று மாற்றிக்கொண்டான்அவன் வைணவத்தை ஏற்றுக்கொண்டதை பட்டமகிஷி ஏற்கமறுத்து, சிரவணபெலகொலா குன்றின் உச்சியிலிருந்து கீழே விழுந்து தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள்….இப்படியாக சமணம் ஹொய்சாள தேசத்தில் வலுவிழக்கத் தொடங்கியதுஇராமானுஜரின் புண்ணியத்தில் வைணவம் வேரூன்ற ஆரம்பித்தது

 

சுல்தானியப் படையெடுப்பால் சிதிலமைடைந்த திருநாராயணபுர ஆலயத்தை மீண்டும் நிர்மாணித்துத் தரும்படி மன்னனிடம் வேண்டினார் இராமானுஜர்மன்னனும் அதற்கு இசைந்தான்

 

சுல்தானியப் படையெடுப்பு

கஜினி முகம்மது கி.பி. 1016—இல் இந்துஸ்தானத்தின் மீது படையெடுத்தான்பாகிஸ்தான் பகுதியைச் சேர்ந்த பஞ்சாபை ஆண்ட ஜெயபாலனை வீழ்த்தினான்அங்கே தன்னுடைய பிரதிநிதியாக மாலிக் ஏஜாஸ் என்பவனை சுல்தானாக நியமித்தான்மாலிக் ஏஜாஸ் தில்லியையும் கைப்பற்றிக் கொண்டான்கோவில்களையெல்லாம் கொள்ளையடித்து, பொன்னாபரணங்களை கஜினிக்கு அனுப்புவதுதான் சுல்தானின் வேலைமேல்கோட்டையின் வைரமுடி கிரீடத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட மாலிக் ஏஜாஸ் 1075- இல் மேல்கோட்டையின் மீது படையெடுத்து வந்தான்வைரமுடி பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டதுகோபத்தில், மேல்கோட்டையைத் தகர்த்து, விக்ரகங்களைச் சூறையாடிச் சென்றார்உற்சவர் இராமப்பிரியரை எடுத்துச் சென்று விட்டான்

 

மறைத்து வைக்கப்பட்டிருந்த மூலவைரையும், வைரமுடியையும் ஸ்ரீராமானுஜர் கண்டுபிடித்தார்உற்சவர் தில்லியில் இருப்பதை, எம்பெருமானே அவரிடம் கனவில் வந்து தெரிவித்தான்இராமப்பிரியரை மீட்க இராமானுஜர் தில்லி சென்றார்யோசித்துப் பார்க்கவேண்டும்போக்குவரத்து வசதியில்லாத அக்காலத்தில், தில்லிக்கு குதிரையில் பயணம் மேற்கொள்ள எத்தனை மாதங்கள் ஆயிற்றோ…?! தொண்ணூறு வயதான அந்தப் பெரியவருக்குத்தான் ( இவரல்லவோ பெரியார்…?! ) எத்துணை நெஞ்சுரம்…?! இந்தப் பரதகண்டத்தில் எவருமே செய்யத் துணியாத காரியங்களையெல்லாம் சாதித்துக் காட்டியவர் உடையவர்ஆச்சாரியரேஉங்கள் பாதம் பட்ட பூமியில், நாங்களும் பிறந்து, உலவிக் கொண்டிருக்கிறோம் என்பதே எங்களுக்குப் பெருமைஉமக்கு ஆயிரம் கோடி வந்தனங்கள்….!

 

மாலிக் ஏஜாஸின் மகள் பீவி லகிமாரின் உள்ளங்கவர்ந்த கள்வனாகி விட்டார் இராமப்பிரியர்….தான் விளையாடுவதற்கென்று தந்தையிடம் அந்த விக்கிரகத்தைக் கேட்டு வாங்கிக்கொண்டாள்…. இஸ்லாம் மதத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் மனதுக்குள் ஊடுருவி, அவளைத் தன்வயப்படுத்திய இராமப்பிரியனின் அழகை என்னவென்று சொல்வது…?!

மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ

ஐயோ இவன் வடிவு என்பதோர் அழியா அழகுடையான்…”

கம்பராமாயணம்ஆரணிய காண்டம்கங்கைப்படலம்

அவனழகை மானிடரான நம்மால் வர்ணிக்க முடியுமாஅதனால்தான் அழியா அழகு என்றான் கம்பன்…!

அப்படிப்பட்ட கள்ளழகனை…. அரவணைத்துயில் அரங்கனைஆராவமுதனை…. திருத்துழாய்மார்பனை…. செல்லப்பிள்ளையை எந்நேரமும் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, அவனையே நினைந்து உருகினாள் லகிமார்…!

 

ஸ்ரீராமானுஜர், மாலிக் ஏஜாஸைச் சந்தித்து, இராமப்பிரியரைத் தன்னிடம் கொடுத்து விடுமாறு வேண்டினார்இராமப்பிரியர், தன்மகள் லகிமாரின் அந்தப்புரத்தில் இருப்பதாகச் சொன்னான் சுல்தான்இராமப்பிரியரை அழைத்துச் செல்வதற்காக இராமானுஜர் வந்திருப்பதைக் கேள்வியுற்ற பீவி லகிமார்அவனை ஒருபோதும் தன்னால் பிரிந்திருக்க இயலாது என்றும், தன்னை எம்பெருமான் ஆட்கொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள்ஸ்ரீதேவி, பூதேவியோடு, பீவி லகிமாரையும் எம்பெருமான் தன்னுடைய காதலியாக ஏற்றுக்கொண்டு, அவளுக்குப் பரமபதம் என்னும் பேரின்பத்தைக் கொடுத்தான்….!

 

எங்கிருந்தோ வந்த ஒரு இந்து தெய்வம், தன்மகளையை அழைத்துச் சென்றுவிட்டதே என்று அரற்றினான் சுல்தான்

ஒருமகள் தன்னையுடையேன்

உலகம் நிறைந்த புகழால்

திருமகள் போல வளர்த்தேன்

செங்கண்மால்தான் கொண்டு போனான்…”  என்று அரங்கனிடம் அரற்றிய விஷ்ணுசித்தரின் கூற்றை இங்கு ஒப்பு நோக்கலாம்….

 

உடையவர் அவனைத் தேற்றி, லகிமாரைத் திருமகளாகப் பெற்றது அவன் பூர்வஜென்மப்புண்ணியம் என்று அவனை வாழ்த்தி, இராமப்பிரியரை அழைத்துக்கொண்டு மேல்கோட்டை திரும்பினார்இராமப்பிரியரின் காலடியில் பீவி லகிமார் இருக்குமாறு ஒரு விக்கிரகம் செய்து பிரதிஷ்டையும் செய்தார்அதோடு நின்றுவிடவில்லைதிருவரங்கம் திரும்பியவுடன், அரங்கனுக்கருகிலேயே, துலுக்க நாச்சியார் என்ற பெயரில் பீவி லகிமாருக்கு ஒரு தனி சந்நிதி அமைத்தார்தினமும் காலையில் துலுக்க நாச்சியார் சார்பாக, அரங்கனுக்கு கோதுமை ரொட்டியும், வெண்ணையும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது..

 

அவரைப் பிராயந் தொடங்கி என்றும்

ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்

துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்

தொழுது வைத்தேன்…”   

என்று காதலில் கனிந்த கோதைக்கும், இராமப்பிரியனின் உள்ளங்கவர்ந்த லகிமாருக்கும் சிறிதளவு கூட வித்தியாசமில்லை….!

 

இதை எழுதும்போது மனம் நெகிழ்கிறது…. அவனை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்….

 

                           

 

 

No comments:

Post a Comment