Thursday, August 13, 2015


இலங்காபுரிக்குச் செல்ல வேண்டுமென்றால், இந்து மகாசமுத்திரத்தைக் கடந்தாக வேண்டும்

கொங்கிற் பொலிந்த தாமரையின்

குழுவுந் துயில்வுற்று இதழ் குவிக்கும்

கங்குற் பொழுதுந் துயிலாத

கண்ணன் கடலைக் கண்ணுற்றான்…”

தேனுடன் திகழ்கின்ற தாமரை மலர்களும், இரவில் இதழ்களைக் குவித்துக் கொள்ளும்பிராட்டியைப் பிரிந்தபின்பு, இரவு நேரத்திலும்; துயிலாத இராமபிரான், அந்தப் பெருங்கடலைக் கண்டான்எம்பெருமானின் கண்ணைத் தாமரைக்கு உவமையாக்குகிறான் கம்பன்

 

கடலைக் காண்கிறபோது, காதல்மனைவியைப் பிரிந்த துன்பம் எம்பிரானை வாட்டுகிறது

பழிக்குங் காமன் பூங்கணைக்கும்

பற்றா நின்றான்…”

மன்மதனுடைய மலரம்புகளுக்கும் இலக்காகத் திகழ்ந்த இராமபிரானுடைய அழகிய புயங்கள் மீது, கடலின் உயர்ந்த அலைகளிலிருந்து, தென்றல் தூற்றும் திவலை( அலைத்துளி) கொல்லன் உலையிடத்துத் துள்ளும் தீப்பொறியைப் போல அவனைச் சுடுகிறது…. காதலர் பிரிவுக்கு எப்பொழுதுமே, “ நீர்த்திவலை சுடுதல் உவமையாகக் கூறுவது மரபு

தமிழ்த்திரைப்படங்களில் நடுநிசியில், கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்துத் தலையில் கொட்டிக் கொள்ளும் காட்சிகளை நினைவுப்படுத்திக் கொள்ளலாம்…. J

 

தூரமில்லை மயிலிருந்த சூழல் என்று மனம் செல்ல….”

மயில் போன்ற சாயலுடைய பிராட்டி, சிறைப்பட்டிருக்கும் இடம் வெகு தூரத்தில் இல்லையென்று…. அவளிருக்குமிடம் மனம் செல்கிறது….!

பிராட்டி சிந்துகின்ற கண்ணீர்த்துளிகள்; அலைகள் போல் மென்மேல் பெருகிவந்து, வள்ளல் மலர்த்தாளில் வீழ்வது ஏய்க்கும்அலைகள்; எம்பெருமானின்,  தொடுகழல் கமலம் அன்ன தாளைத் தழுவுதலை, கம்பன் எத்தனை அழகாகக் கற்பனை செய்கிறான்J

 

இராமாவதாரத்தில்தான், “ வள்ளல் என்கிற அடைமொழியில் எம்பெருமான் போற்றப்படுகிறான்

தெள்ளி யார்பலர் கைதொழும் தேவனார்

வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்….”

கோதை நாசியார்…. நாச்சியார் திருமொழி….

கள்வா ! கடன்மல்லைக் கிடந்த கரும்பே !

வள்ளால் ! உன்னை யெங்ஙனம் நான் மறக்கேனே !...

திருமங்கையாழ்வார்…. பெரிய திருமொழி….

 

குயில் போன்ற குரலினளான பிராட்டியின் துன்பத்தைப் போக்கவும், தேவர்கட்கு அரக்கரால் நிகழ்ந்த மனக்குறைகளை ஒழிக்கவும், “ கை வெம் சிலையன் திருக்கரத்தில் கோதண்டம் என்னும் வில்லை ஏந்தியவனும், கங்கைநதி பாயப்பெற்ற அழகிய கோசல நாட்டை உடையவனான ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தியைப்     பார்த்து, அலைகள் கைகளை உயர்த்தி, பெருமுழக்கத்துடன் ஆரவாரிக்கின்றனவாம்…!

 

இன்ன தாயக் கருங்கடலை

யெய்தி யிதனுக் கெழுமடங்கு

தன்ன தாய நெடுமானத்

துயரம் காதல் இவை தழைப்ப….”

யுத்த காண்டம்…. கடல்காண் படலம்….

இத்தகையதான கரிய கடலையடைந்து; இந்தக் கடலைக் காட்டிலும் ஏழுமடங்காகத் தன்னிடமுள்ள மிக்க மானமும், துன்பமும், ஆசையுமாகிய இவைகளின் மேல்விளைவு என்னது ஆகும்…. இனி நிகழக்கூடிய செயல் என்ன…? என்று ஆராய்ந்திருந்தான் ஸ்ரீ இராமபிரான்….

 

யானே என்னை அறிய கிலாதே

யானே என்றன தேயென் றிருந்தேன்

யானே நீ என் உடைமையும் நீ

வானே ஏத்துமெம் வானவ ரேறே…!....”

நம்மாழ்வார்திருவாய்மொழி….

 

 

 

 

 

No comments:

Post a Comment