Monday, December 29, 2014

 
சகோதரப்பாசம் பற்றி அவசியம் நான் எழுதியாக வேண்டும்.
எனக்கும், என் சகோதரர்களுக்குமிடையே இருக்கும் அன்பு; அண்ணாவுக்கும், தம்பிக்குமிடையே இருக்கும் ஆழ்ந்த நட்பு; என் அம்மாவுக்கும், மாமாக்களுக்குமிடையே இருக்கின்ற புரிதல்; என் தந்தைக்கும், அவரது சகோதரர்களுக்குமிடையே
இருந்த மரியாதை...இப்படி என் வாழ்நாளில் நான் ரசித்த. ரசிக்கும் சகோதரப்பாசத்தைப் பற்றி எழுதுவதில் எனக்கு எப்போதுமே மகிழ்ச்சிதான்...

இந்த நிம...ிஷம் வரை எனக்கு மிகப்பெரிய பலமாக
இருப்பவர்கள் என் சகோதரர்கள்தான்..அண்ணன் தம்பிக்கு
நடுவில் நான் இராணி போல வளர்க்கப்பட்டேன் என்பதுதான்
நிஜம்...என் தோழிகள் அடிக்கடி சொல்வார்கள்..” நீ மிகவும் கொடுத்து வைத்தவள்” என்று...இறை எங்கள் குடும்பத்துக்கு அளித்த கொடை என்றுதான் சொல்லவேண்டும்...
சகோதரர்கள் மட்டுமல்ல...சகோதரர்களின் மனைவிகளும்
மிகவும் பிரியமாக இருப்பார்கள்...இதுவும் எம்பெருமான்
அளித்த வரமே...! மாமாக்கள் பற்றி சொல்லவே வேண்டாம்.
எங்கள் எல்லோருக்குமே friend, philosopher, guide மாமாக்கள்தான்..
மாமிகள் எங்களை அப்படிக் கொண்டாடுவார்கள்..
என் அம்மாவுக்கும், மாமிகளுக்குமிடையேயான பாசத்தைச்
சிறுவயதிலிருந்து பார்த்து, ரசித்து வருகிறேன்...
இதெல்லாம் கொடுப்பினை அல்லாமல் வேறென்ன...!

இலக்கியங்களிலும் சகோதரப்பாசத்துக்கென்று தனியிடம்
உண்டு..இராமாயணத்திலும், மகாபாரதத்திலும்
சகோதரப்பாசம் தான் பிரதானமாக இருக்கிறது...தன்
சகோதரனுக்காக, அரசுரிமையைத் துறந்து சமணத்
துறவியானவர் இளங்கோவடிகள்...

சுற்றம் தழால் அதிகாரத்தில் உறவினர்களிடையே
நல்லுறவு பேணுவதன் அவசியத்தைப் பத்து பாடல்களில்
வலியுறுத்துகிறான் வள்ளுவன்..

“விருப்பு அறாச் சுற்றம் இயையின்
அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும்...”

அன்பு அழியாத நல்ல சுற்றம் ஒருவனுக்கு வாய்க்குமாயின் அஃது அவனுக்குக் குறைவில்லாத செல்வங்கள் பலவற்றையும் தரும்..

இராமகாதையில் சகோதரப்பாசத்துக்குத்தான் முக்கிய இடம்...இப்படிப்பட்ட சகோதரர்கள் நமக்கில்லையே
என்று எல்லோரையும் ஏங்க வைக்கும்படியான
பாத்திரப் படைப்பு...

என்று சிந்தித்து இளையவற் பார்த்து இரு
குன்று போலக் குவலிய தோளினாய்
என்று கற்றனை நீ இது போல் என்றான்
துன்று தாமரைக் கண் பனி சோர்கின்றான்.

அயோத்தியா காண்டம்..சித்திரக்கூடப் படலம்...

என் தம்பி எந்தத் துணையுமில்லாமல் எத்தனை அழகாக
இந்தக் குடிலை அமைத்திருக்கிறான் என்று மனதிலே நினைத்த இராமன், இலக்குவனைப் பார்த்து, “ இரண்டு மலைகளைப் போன்ற தோள்களைப் பெற்றவனே..இவ்வளவு சிறப்பாகக் குடிலை அமைக்கும் தொழிலை
நீ எங்கு கற்றாய்..?!..” என்று கூறி தாமரைமலர் போலும்
தன் இரு கண்களில் கண்ணீரைச் சொரிந்தான்..

இதே இராமகாதையில்தான் சகோதரனுக்காக உயிர்
துறக்கும் கும்பகர்ணனும், மகாபாரதத்தில்
சகோதரனுக்காக உயிர் விடும் துச்சாதனனும் இதிகாசக்
காப்பியங்களில் மறக்க முடியாத கதாப்பாத்திரங்கள்...

இன்றையக் காலக்கட்டத்தில் அரசியல் மற்றும் தொழில்
துறைகளில் சகோதரர்கள் கோலோச்சிக் கொண்டு
இருக்கிறார்கள் என்றாலும் அவர்களுக்கிடையேயான
ஸ்னேகம் நீரு பூத்த நெருப்பாகத்தானிருக்கிறது..
காரணம்.. இது கலியுகம்...:)

.
See More


 
 
.

No comments:

Post a Comment