Monday, December 29, 2014

முடியாட்சியில், மன்னனுக்குப்பிறகு மூத்தமகன் அரியணை
ஏறுவதுதான் பொதுவான மரபு..மூத்தமகன் இல்லையென்றால், இளையமகன்...மன்னனுக்கு வாரிசு
இல்லையென்றால், கூடப்பிறந்த சகோதரன்..சகோதரனின் மகன், மகன் வயிற்றுப்பேரன்..மகள் வயிற்றுப்பேரன்..இந்த முறைகளில் கூட ஆட்சி நடந்திருக்கிறது..தமிழர் அரசபரம்பரையில் மருமகன் ஆட்சி செய்ததாக, நான் இதுவரைக் கேள்விப்பட்டதில்லை...
பிணிஇன்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்...
அணிஎன்ப நாட்டிற்கு இவ் ஐந்து...என்பது வள்ளுவன் வாக்கு..

நோய் இல்லாதிருத்தல்,செல்வம், விளைபொருள் வளம்,
இன்பவாழ்வு,நல்ல காவல் ஆகிய இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு..
அப்படிப்பட்ட அயோத்திநாட்டின் மன்னன் தசரதன்,தன்னுடைய வயோதிகநிலையைக் கருத்தில் கொண்டு, மூத்தமகனான இராமனுக்கு ராஜ்யத்தைக் கொடுத்துவிட்டு; மனைவிகளோடு வனம் சென்று வானப்பிரஸ்தம் என்கிற வாழ்க்கைமுறையை மேற்கொள்ள நினைக்கிறான்..அமைச்சர்களோடும், குலகுருவான
வசிஷ்டரோடும் கலந்தாலோசிக்கிறான்..இராமனை அழைத்து அவனிடம் தன் முடிவைச் சொல்கிறான்..
மன்னனின் பெருமையும், தந்தையின் கனிவும் ஒருங்கே அமைந்த கம்பனின் பாடல்...
அனையது ஆதலின் அருந்துயர்ப் பெரும் பரம் அரசன்
வினையின் என்வயின் வைத்தனன் எனக் கொளவேண்டா
புனையும் மாமுடி புனைந்து இந்த நல் அறம் புரக்க
நினையல் வேண்டும் யான் நின்வயின் பெறுவது ஈது என்றான்.
அயோத்தியா காண்டம்..மந்திரப்படலம்.
அரிய துன்பத்தைத் தரும் பெரிய அரசியல் பாரத்தைத் தந்திரமாகத் தந்தை என்மீது சுமத்தினான் என்று நினைக்காதே..பெருமை பொருந்திய இந்த மகுடத்தை அணிந்துகொண்டு இந்த அரசியல் அறத்தை நீ காக்க வேண்டும்..நான் உன்னிடம் வேண்டுவது இதுவே...என்றான் தசரதன்...
அயோத்தியா என்றாலே எப்போதும் இராமன்தான் நினைவுக்கு வருவான்..இப்போதெல்லாம் பாபரும் கூடவே சேர்ந்து நினைவில் வருகிறார்...
See More
 

No comments:

Post a Comment