Monday, December 29, 2014

இன்றைய கணினியுகத்தில் பொழுது போக்குவதற்கு ஏராளமான சாதனங்கள் உள்ளன..என்னுடைய பள்ளிப்பருவத்தில் நான் விளையாடிய விளையாட்டுக்கள் இப்பொழுது வழக்கொழிந்து போய்விட்டன..பாண்டியாட்டம், ஏழுகல்லு, தாயக்கட்டம், பரமபதம், பல்லாங்குழி, கல்லா மண்ணா, கிட்டிப்புள், கண்ணாமூச்சி. பூத்தொடுத்தல்...சொல்லிக்கொண்டே போகலாம்...தென்னைமட்டையில் கிரிக்கெட்பேட் செய்து விளையாடுவோம்..தாயக்கட்டம் விளையாடும்போது காயை யாராவது வெட்டிவிட்டால் அடிதடி சண்டையே நடக்கும்..பாட்டிதான் சண்டையை விலக்கி விடுவார்..விடுமுறைநா...ட்களில் வலையப்பேட்டை பாட்டிவீடு திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்..அப்போதெல்லாம் குளிர்சாதன வசதி கிடையாது...இளநீர்க்காய்களைப் பறித்து கிணற்றுக்குள் போட்டுவிடுவோம்..வேண்டும்போது, கயிறு மூலம் வாளியைக் கிணற்றில் இறக்கி; காய்களை எடுப்போம்..ஜில்ஜில் இளநீர்..என்னைபோன்ற புத்தகப்புழுக்களுக்கு பாட்டிவீட்டுக்குள்ளேயே நூலகம் உண்டு..பொழுது போவதே தெரியாது..இன்றைய குழந்தைகளுக்கு இந்த விளையாட்டுகள் எதுவுமே தெரியாது..கிராமப்புறங்களில் ஏதோ கொஞ்சம்பேர் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்...
இராமாயணக்காலத்தில் அயோத்திமாநகர் மக்கள் எப்படியெல்லாம் பொழுது போக்கினார்கள்..பெரிய பட்டியலே இருக்கிறது கம்பனிடம்..உதாரணத்துக்கு ஒரு பாட்டை மட்டும் இங்கே சொல்கிறேன்...
ஊடவும்,கூடவும் உயிரின் இன்னிசை
பாடவும், விறலியர் பாடல் கேட்கவும்,
ஆடவும் அகன் புனல் ஆடி ஆய்மலர்ச்
சூடவும் பொழுதுபோம் சிலர்க்கு அத்தொல்நகர்..
பாலகண்டம்..நகர்ப்புறப்படலம்
வால்மீகி ராமாயணத்தை மூலநூலாகக் கொண்டு, கம்பன் இராமாயணத்தை எழுதியிருந்தாலும், தமிழின் தனித்தன்மையை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை..மேலே குறிப்பிட்ட இந்தப்பாடலிலும் மருதநிலத்துக்கே உரிய மண்வாசனை வார்த்தைகளில் வீசுவது தெரியும்...
See More
Like · ·

No comments:

Post a Comment