Monday, December 29, 2014




பால் வண்ணம் பருவம் கண்டு, வேல் வண்ணம் விழியில் கண்டு...பாசம் படத்தில்(எம்.ஜி.ஆர். சரோஜாதேவி) கண்ணதாசன் எழுதிய பாடல் இது..இந்தப்பாடல் கம்பராமாயணத்தின் பாதிப்பில் எழுதிய பாட்டு என்று பேட்டி ஒன்றில் கண்ணதாசன் கூறியிருந்தார்..அந்தப்பாடல் என்னவாகயிருக்கும்..? கம்பராமாயணத்தில் தேடிக்கண்டுபிடித்தேன்..
இவ்வண்ணம் நிகழ்ந்தவண்ணம் இனியிந்த உலகுக்கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவுவதெல்லாம்
மைவண்ணத்து அரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே உன்...
கைவண்ணம் அங்கே கண்டேன்; கால்வண்ணம் இங்கே கண்டேன்..
...பால கண்டம்...அகலிகைப்படலம்..


See More






 

  •  

 

 
 
 

No comments:

Post a Comment