Monday, December 29, 2014

பண்டையத் தமிழர் நாகரிகம், வீரம் விளைந்த மண்ணுக்குச்
சொந்தம்...தமிழ்தொல்குடி விளையாடிய விளையாட்டுகளில்
கூட வீரம் கலந்திருந்தது..ஜல்லிக்கட்டு, மல்யுத்தம், குதிரை
யேற்றம், வாள் மற்றும் வில் பயிற்சி, இரதம் ஓட்டுதல்...இப்படி எல்லாமுமே வீரத்தோடு சம்பந்தப்பட்டது..
...
தமிழ்ப்பெண், வீரனைத்தான் காதலித்தாள்..தன் பெண்ணுக்குக் கணவனாக வரப்போகிறவன் வீரனாக
இருக்கவேண்டுமென்று ஒவ்வொரு தந்தையும் நினைத்தான்..
இன்றைய காலகட்டத்தில், பெண்கள் மீதான வன்முறைகள்
அதிகமாக இருக்கிறது...தற்காப்புக்கலைகள் கற்றுக்
கொள்வதில் பெண்கள் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
பெண் தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ளவேண்டிய
சூழலில் நாமிருக்கிறோம்..
சிவனின் சிலையை(வில்) கையில் எடுத்து எவனொருவன்
நாணேற்றுகிறானோ, அவனுக்குத்தான் என் மகளைத்
திருமணம் செய்து கொடுப்பேன் என்று மிதிலை அரசன்
ஜனகன் சூளுரைத்திருக்கிறான்...இந்த மரவுரி தரித்த
இளைஞனாவது அந்தச் சபதத்தை நிறைவேற்றமாட்டானா...?!
தடுத்து இமையாமல் இருந்தவர் தாளில்
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார்
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால்
எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்...
பாலகாண்டம்--கார்முகப் படலம்.
அவையில் இருந்தவர்கள் இமைக்காத விழிகளோடு
காத்திருந்தனர்..வீரன் வில்லை எடுக்கிறான்..வில்லை
எடுத்ததற்கும், ஒடித்ததற்கும் இடையே நிகழ்ந்த செயல்களை
ஒருவரும் அறியார்...வில் முறிந்த சத்தத்தை மட்டுமே
கேட்டார்கள்...
தமிழ்மொழி ஓசைநயமிக்க மொழி...வெறும் வார்த்தைகளின்
மூலமாகவே ஓசையை நம்மால் உணர்ந்துகொள்ளமுடியும்.
இந்தப்பாடலைப் படிக்கும்போதே வில் முறிகிற சப்தம்
காட்சிபூர்வமாக நம் மனதில் தோன்றுகிறது..அதுதான்
கம்பனின் கவித்துவம்..
தமிழ்த்திரைப்படங்களில் வரும் கதாநாயகிகள்
ரெளடிகளைக் காதலிப்பதை வீரம், என்று நீங்கள்
பொருள் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல...
See More

 

  •  

No comments:

Post a Comment