Monday, December 29, 2014

தமிழுக்கு அழகு சேர்ப்பது “ழ’கரம்..ஒருவர் “ழ”கரத்தை எத்துணை அழகாக உச்சரிக்கிறார் என்பதைப் பொறுத்து, தமிழ்மொழி மேல் அவருக்கிருக்கிற ஈர்ப்பை உணர்ந்து கொள்ளமுடியும்..
கவிச்சக்கரவர்த்தி கம்பன் முழுவதும் ழகரம் வருமாறு விருத்தப்பாவில் அமைத்திருக்கிறான்...
குழலிசை மடந்தையர் குதலை கோதையர்...
மழலைஅம் குழலிசை மகரயாழிசை
எழிலிசை மடந்தையர் இன்சொல் இன்னிசை
பழையர்தம் சேரியில் பொருநர் பாட்டிசை.

பாலகாண்டம்---நகர்ப்படலம்.
கம்பனுக்கு முன்னோடியான ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த கோதைநாச்சியார், தன்னுடைய நாச்சியார் திருமொழியில் ழகரம் அமைத்து கவிமழை பொழிந்திருக்கிறாள்..
எழிலுடை அம்மனைமீர்; என்னரங்கத்து இன்னமுதர்
குழலழகர், வாயழகர், கண்ணழகர், கொப்பூழில்
எழுகமலப்பூவழகர் எம்மானார் என்னுடைய
கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினாரே...
நாச்சியார் திருமொழியைப் பற்றி விரிவாகப் பிறகு எழுதுகிறேன்..
கம்பராமாயணத்தைப் பக்திக்காப்பியம் என்று நினைத்துக்கொண்டு படிக்கவேண்டும் என்கிற அவசியம் எதுவுமில்லை..கம்பனின் மொழி ஆளுமையைக் கண்டு, ரசித்து, வியக்கலாம்...
See More

Like · ·
  •  

No comments:

Post a Comment